உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

2

39

சைவசித்தாந்த முடிபொருளாகலின், அம் முடிபு தேற்றிச் “சிவமாக்கி எனையாண்ட" எனக் கூறிய மாணிக்கவாசகப் பெருமானை, மாயாவாதவாடை வீசப்பெற்றாரெனக் கூவிய 'தமிழ்வரலாறுடையார்’ கூற்று உண்மையறியாமையின் உள்ளீடு இல்லா வெறும் பதடியேயாம் என்க.

அற்றேற், பிரமம் ஒன்றே உலகுயிர்களெனப் பலவாய்த் தோன்றாநின்ற தென்னும்

மாயாவாத

கோட்பாட்டிற்கு இசையவே மாணிக்கவாசகரும்,

“நிலன்நீர் நெருப்புயிர்நீள் விசும்பு நிலாப்பகலோன்

வேதாந்தக்

புலனாய மைந்தனோடு எண்வகையாய்ப் புணர்ந்துநின்றான் உலகே ழெனத்திசை பத்தெனத்தான் ஒருவனுமே

பலவாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ'

ல்லா

என்று கூறினாராலெனின்; அற்றன்று, இறைவன் எல்லாப் பொருள்களிலும் பிரிவின்றிக் கலந்து நிறைந்து நிற்கும் இயல்பு பற்றி, அவன் ஒருவனுமே பலவாகி நின்றானெனக் கிளந்த தல்லாமல், அவனையன்றி வேறேதொரு பொருளும் திருக்க, அவன் ஒருவனே பலபொருளுமாய்க் காணப்படு கின்றான் என்னுங் கொள்கைப்பற்றியன்று ஒன்றே பல பொருளிலுங் கலந்து நிற்கும் முறைபற்றி அவ்வாறு அடிகள் ஓதினாரென்பதற்கு, அவர் “எண்வகையாய்ப் புணர்ந்து நின்றான்” என்று மேலே கிளந்துரைத்ததே சான்றாம். “புணர்ந்து நிற்றல்” என்பது 'கூடிநிற்றல்' என்னும் பொருளைப் பயக்குமே யல்லாமல், ஒன்று மற்றொன்றாய்க் காணப்படுதல் அல்லது திரிவு படுதல் என்னும் பொருளைப் பயவாது ஓர் உடம்பினுட் கலந்து நிற்கும் உயிர் அவ்வுடம்பின் ஐம்பொறிகளினு ஐம்புல உணர்வு தோற்றுவித்தல் பற்றிப் பலவாய்க் காணப்படினும், உண்மையில் அஃது அவற்றின் வேறாய்த்தான் ஒன்றேயாதல் போல, இறைவனும், உலகத்துப் பொருள்கள் எல்லாவற்றினும் விரவிநின்று அவ்வவற்றினூடே தன்னியகத்தைத் தோற்று வித்தல்பற்றி அவை பலவாய்க் காணப்படினும், உண்மையில் அவன் வேறாய்த்தான் ஒருவனே யாவன் என்று கடைப்பிடிக்க இவ்வுண்மை சிவஞானபோத 2ஆம் சூத்திரம் முதலதி கரணத்தின்கண் ஆசிரியர் மெய்கண்டதேவரால் நன்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/48&oldid=1588303" இலிருந்து மீள்விக்கப்பட்டது