உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

மறைமலையம் - 23

விளக்கப்பட்டது. சிவம் எல்லாப் பொருளுள்ளுங் கலந்து நிற்குமெனக் கொள்ளுதலே அடிகளது கோட்பாடென்பதற்கு,

“நள்ளுங் கீழுளும் மேலுளும் யாவுளும் எள்ளும் எண்ணெயும் போல்நின்ற எந்தையே”

(திருச்சதகம், 46)

என்று அவர் தெளித்துரைத்தமையே சான்றாம். எள்ளும் அதனுட் கலந்து நிற்கும் எண்ணெயும் பொருட்டன்மையால் வேறாயுங் கலப்பினால் ஒன்றாயும் நிற்றல்போல, உலகுயிர்களும் சிவமும் தன்மையால் வேறாயும் கலப்பினால் ஒன்றாயும் நிற்குமெனக் கூறியவதனால், அடிகள் சைவ சித்தாந்தத் தெளிபொருளாளராதல் நன்கு துணியப்படும். பிரமமே பழுதையிற் பாம்புபோல் உலகுயிராய்க் காணப்படுகின்றதென விவர்த்த வாதங் கூறும் மாயாவாதிக்கும், பிரமமே பால் தயிரானாற்போல் உலகுயிர்களாய்த் திரிந்ததெனப் பரிணாம வாதங் கூறும் ஏகான்மவாதிக்கும் எள்ளிலெண்ணெயை உவமங் கூறுதல் ஒருவாற்றானும் ஏலாதென்க. மேலும், எல்லாப் பொருள்களுமாய் இறைவன் உளன் என்று தாம் புகன்றவள வானே அவன் ஒருவனே அங்ஙனம் பலவாயினான், அவனை யன்றி வேறேதொரு பொருளும் இல்லையெனச் சிற்றறிவினார் மயங்கிக் கொண்டுவிடுதலுங் கூடுமெனக் கருதியேபோலும் அடிகளே.

“நிரந்த ஆகாயம் நீர் நிலம் தீ காலாய்

என்றும்,

அவை அல்லையாய்”

(கோயிற்றிருப்பதிகம். 6)

“பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்குஒளிசேர் விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி”

என்றும்,

“பித்தனே எல்லா உயிருமாய்த் தழைத்துப்

பிழைத்து அவை அல்லையாய் நிற்கும்

எத்தனே,”

(திருவெம்பாவை. 18)

(பிடித்தபத்து. 8)

என்றுந் தெளித்துரைத்துக், கலப்பினால் எல்லாப் பொருள்களும் எல்லாவுயிர்களுமாய் நிற்கும் முதல்வன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/49&oldid=1588304" இலிருந்து மீள்விக்கப்பட்டது