உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 2

71

வேதங்களாகிய தேவார திருவாசகம் அருளிச் செய்த திருஞானசமபந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்னும் நால்வர்க்கும் பிற்பட்ட காலத்தேதான் அக் காமிகாகமம் இயற்றப்பட்டமை தெள்ளிதிற் புலனாம்.

9

இன்னும், சிவபெருமானுக்குத் திருவிழாச் செய்யப்படுங் கால் ஏழாம் நாளிலே, திருஞானசம்பந்தர்க்குத் தோற்றுச் சமணர்கள் கழுவில் ஏறின செய்தி கொண்டாடப்படுதல் வேண்டுமென்று உத்தரகாரணாகமங் கூறுகின்றது. அதனால் அவ்வாகமம் திருஞானசம்பந்தர் காலத்திற்கு மிகவும் பிற்பட்டு எழுந்ததாதல் நன்கு துணியப்படும். இன்னும், இவ் வடமொழி ஆகமங்களில் தேவாரப்பதிகங்கள் ஓதும் தமிழ் இசைப்பெயர் களுங் காணப்படுகின்றன. இவ்வாற்றாற் ‘காமிகம்,’ ‘காரணம்’ முதலான வடமொழி யாகமங்கள் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டிற்குப் பின் தமிழ்நாட்டின்கண் இருந்த கோயிற் குருக்கண் மாரால்

பெறப்படும்.

எழுதப்பட்டவைகளாதல் இனிது

இனித், திருமூலராற் குறிப்பிடப்பட்ட ஆகமங்களோ கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்கு முன்னரே இயற்றப்பட்டனவாதல் வேண்டும்; ஆகையால், அவர் மொழிந்த ஆகம நூல்களும்,

ப்போது வடமொழியிற் காணப்படும் ஆகம நூல்களும் ஒன்றே யாகாமை எவர்க்கும் வெள்ளிடை மலை போல் விளங்கும். திருமூலராற் குறிக்கப்பட்ட ஆகம நூல்கள் வேதாந்த சித்தாந்த உண்மையை ஒன்றாக முடித்துக்காட்டுந் தூய சைவசமய ஞானம் ஒன்றையே விளக்கு மென்பது.

66

ஆகமம் ஒன்பான் அதிலான நாலேழு

மோகமில் நாலேழும் முப்பேதம் உற்றுடன்

வேகமில் வேதாந்த சித்தாந்த மெய்ம்மையொன் றாக முடிந்த அருஞ்சுத்த சைவமே'

وو

(திருமந்திரம். 74)

என்று அவர் அருளிச்செய்யுமாற்றால் நன்கு விளங்கும். மாணிக்கவாசகப் பெருமானும் ஆகமநூ லுணர்ச்சி யொன்றால் மட்டும் சிவபெருமான்றன் உண்மைத் தன்மையை எளிதில்

அறியலாகுமென்பது புலப்பட,

“ஆகம மாகிநின்று அண்ணிப்பான் தாள்வாழ்க”

(சிவபுராணம் 4)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/80&oldid=1588351" இலிருந்து மீள்விக்கப்பட்டது