உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க

70

மகன்'

  • மறைமலையம் - 23

நிறுத்தக் கருதி எதுதான் சொல்லத் துணியார்! தமிழ்ச் சிவஞானபோதத்திற்கு எத்தனையோ நூற்றாண்டுகள் முற்பட்டதாயிருந்தும், 'என் பேரனுக்கு என் முப்பாட்டன் என்பார் கூற்றோடொப்ப, ஒரு பார்ப்பனர் இரௌரவாகமத்தின் ஒரு சிறிய ஏட்டை மொழிபெயர்த்த மெய்கண்ட தேவர்' என்று மெய்கண்ட தேவரை ஆங்கில மொழியில் இகழ்ந்தெழுதியது அவ்வாறெழுதிய தமக்கே இகழ்ச்சியாய் முடிந்ததை அறிந்திலர். ஆங்கிலம் உணர்ந்தாரிற் பெரும்பாலார் தமிழ்நூல் உண்மைகளை ஓர் அணுத்துணையும்

ணராதவராகலின்

அவர் இடையே எவரும் ஏதும் சொல்லலாம். அது நிற்க. ஈண்டுக் கூறியவாற்றாற் 'சிவஞான போதம்' என்னும் ஒப்புயர்வற்ற ஆகமநூலும் முதலில் தமிழிற் செய்யப்பட்டதே யல்லாமல் வடமொழியிற் செய்யப்பட்டதல் லாமை நன்கு விளங்கும்.

மேலும், சிவஞானபோதத்தின் கருத்துப்பொருள் அறிவிக்கும் 'சூர்ணிகைக்கொத்ததை’ திருவெண்ணெய் நல்லூர்த் திருக்கோயிலில் இருக்கும் பொல்லாப் பிள்ளையார் அருளிச்செய்து, அதனை மெய்கண்டதேவர்க்கு வழங்கினார் என்று ஆராய்ச்சியில்லாச் சைவ நூற்புலவர்கள் கூறி வருகின்றனர்; ஆனால், இதனை ஆராய்ந்து பார்த்த ஒரு புலவரோ அச் சூர்ணிகைக் கொத்துச் சுவாமிநாத தேசிகர் என்பவரால் இயற்றப்பட்டதென அஃதெழுதிய ஏட்டுச் சுவடிகளின் ஈற்றில் குறிக்கப்பட்டிருத்தலை எடுத்துக் காட்டினார். இங்ஙனமே உண்மையல்லாப் பொய்க் கதைகளை ஆராய்ந்துபாராமல் உண்மையென நம்பி அவற்றை விடாப் பிடியாய்த் தழுவி நடப்பாரே இத் தமிழ் நாடெங்குங் காணப்படு கின்றனர். இத்தகையோர், பிற்காலத்துக் கோயிற் குருக்கண் மாரால் வடமொழியில் மொழிபெயர்த்து வைக்கப்பட் டிருக்கும் ‘காமிகம்' முதலான ஆகமநூல்களைச் சிவபெருமான் அருளிச்செய்தன வென்று புகலுதல் ஒருவியப்பன்று.

அல்லதூஉம். இஞ்ஞான்று வழங்கும் வடமொழி ஆகமங்களிற் பெரியதுஞ் சிறந்ததுமான 'காமிகாகமத்தின்’ நான்காம் படலம். 437,438,439 ஆம் சுலோகங்களிற் சிவபெருமானுக்கு வழிபாடு ஆற்றுங்கால் தமிழ்வேதங்கள் ஓதுதல்வேண்டும் என்பது குறிக்கப்பட்டிருத்தலின், தமிழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/79&oldid=1588350" இலிருந்து மீள்விக்கப்பட்டது