உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

2

69

சான்றோர் கண்டு நகுவராகலின் அவரது கருத்து நிரம்பு மாறில்லையென்க. எனவே, வடமொழிச் சிவஞான போதத்தின் இறுதிச் சூத்திரத்திற் போந்த இக்குறிப்பு ஒன்றுமே அஃது ஆ சிரியர் மெய் கண்டதேவர் அருளிச் செய்த தமிழ்ச் சிவஞான போதத் தினின்று பிற்காலத்தவரால் மொழிபெயர்த்து செய்யப்பட்ட தென்பதனை நாட்டுதற்குப் போதிய சான்றாம்.

அதுவேயுமன்றி, மெய்கண்ட தேவர்க்குப் பன்னெடுங் காலம் பின்ருந்த கடவுண்மாமுனிவர் நாம் இயற்றிய நாம் திருவாதவூரடிகள் புராணத்திற் சிவபிரான் மாணிக்கவாசகரை அடிமை கொள்ளும் பொருட்டுத் திருப்பெருந்துறையிற் குருந்தமரம் ஒன்றன் நீழலிற் குருவடிவு தாங்கி அமர்ந்திருந்த காலையில் தமது கையொன்றிற் ‘சிவஞானபோதம்' என்னும் நூலை ஏந்தியிருந்தாரென்று கூறினாற் போல, மெய்கண்ட தேவர்க்கு முன்னிருந்த பெரும்பற்றப் புலியூர் நம்பியார் தாம் இயற்றிய திருவிளையாடற் புராணத்தில் அங்ஙனமே திருவாதவூரடிகட்குச் சிவபெருமான் குருவடிவுகொண்டு மெய்ப்பொருள் அறிவுறுத்த எழுந்தருளியிருந்தமை கூறுகின்றுழி அவர் கையிற் சிவஞானபோதம் இருந்ததென்று உரையாமையால், அப்பெரும்பற்றப் புலியூர் நம்பி காலத்திற் சிவஞானபோதம் என்பதொரு இருந்ததில்லை யென்பதூஉம், ஆசிரியர் மெய்கண்ட தேவர் அருளிச் செய்த பின்னர்த்தான் அந்நூல் ஒன்று முதலிற் றமிழிலும், அதன்பின் அதன் மொழிபெயர்ப்பாய் ஒன்று வடமொழியிலும், உளவாயின வென்பதூஉம் இனிது விளங்குகின்றன வல்லவோ?

நூல்

தமிழ்ச் சிவஞானபோத நூலில் வடசொற்கள் சில காணப் படுதல்பற்றி அதனை வடநூல் மொழிபெயர்ப்பு என்று கூறத் துணிந்தாரும் உளர். தூய பண்டைத் தமிழ் வழங்கிய காலத்திற் றோன்றிய தனித்தமிழ் நூல்களாகிய 'சிலப்பதிகாரம்,' 'மணிமேகலை' என்பவற்றிலும் அங்ஙனமே வடசொற்கள் சில காணப்படுதல் பற்றியும், ‘திருவாசகம்,’ ‘திருக்கோவையார்,’ 'திருமந்திரம்,' 'ஞானாமிர்தம்,' 'தேவாரம்' என்பவற்றிலும் அங்ஙனமே சில வடசொற்கள் காணப்படுதல் பற்றியும் அவையெல்லாம் வடநூல் மொழிபெயர்ப் பென்று கூறுதல் கூடுமோ? உண்மையாராய்ச்சி இதுதான் என் றுணரமாட்டா T தார் தாம்கொண்ட கொள்கையை எங்ஙனமாயினும் நிலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/78&oldid=1588349" இலிருந்து மீள்விக்கப்பட்டது