உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

மறைமலையம் -23

குறிப்பாதல், வணக்கமாதல் எங்கும் எட்டுணையுங் காணப் படாமையின், அந் நூல்கள் ே தோன்றிய காலங்களிற் பிள்ளையார் வணக்கம் இத் தமிழ்நாட்டின்கண் உண்டாக வில்லை யென்பது தெளியப்படும். அப்பர் திருஞானசம்பந்தர் அருளிய தேவாரங்களிற் பிள்ளை யாரைப்பற்றிய குறிப்புகள் காணப்படுதலின்.5 கி.பி. ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியி லிருந்தே யானைமுகக் கடவுள் வழிபாடு இத் தென்றமிழ் நாட்டின் கண் உளதாயிற்றென்று துணிக. இக்குறிப்பு ஒன்றுமே மாணிக்கவாசகப் பெருமான் ஏனை மூவர்க்கும் முந்தியோ ராதலை நாட்டுதற்குப் போதிய சான்றாம். திருமந்திர நூலுள் யாண்டுங் காணப்படாத யானைமுகக்கடவுள் வழிபாடு அதன் முதலில் வைக்கப் பட்டிருத்தலானும், “ஐந்து கரத்தனை என்னும் அச்செய்யுளை முதற்செய்யுள் என்று சேக்கிழார் கூறாமையானும் அவை யிரண்டும் பிற்காலத்தவரால் எழுதிச் சேர்க்கப்பட்டனவா மென்பது துணியப்படும். பாயிரத்துட் குருமடவரலாறு' விளம்புஞ் செய்யுட்கள் “மூலன்... சுந்தர

ஆகமச்

சொன்மொழிந் தானே" எனத் திருமூலரைப் படர்க்கையிடத்து வைத்துரைத் தலின், அவ்விரண்டும் பிறராற் செய்யப்பட்ட மை திண்ணமாம். இங்ஙனமே திருமந்திரப் பாயிரத்தின் இடையிடையே பிறராற் சேர்க்கப்பட்ட செய்யுட்களே, திருமூலர் அருளிச்செய்த மூவாயிரம் பாட்டுக்களுக்குமேல் நாற்பத்தேழாயின. இப் பாயிரத்துள் 'வேதச்சிறப்பு,' 'ஆகமச் சிறப்புக்’களைக் கிளக்கும் பல செய்யுட்களும் பிற்காலத்தவரால் எழுதிச் சேர்க்கப்பட்டன வாய் முன்னொடுபின் முரணுற்றுக்கிடத்தலின், “பெற்றநல் லாகமங்காரணம் காமிகம் என இஞ்ஞான்றை ஆகமப் பெயர்களை எடுத்துரைக்கும் அச்செய்யுள் திருமூலர் செய்ததன்றெனக் கடைப்பிடிக்க

இவ்வாறே நூல்களின் பாயிரத்துட் பிறர் தாமெழுதிய வற்றைச் சேர்த்துவிடுந் தீயவழக்கத்தைப் பெரிய புராணம் என்னுந் ‘திருத்தொண்டர்புராண ஆராய்ச்சி'யுள்ளும் எடுத்துக் காட்டியிருக்கின்றேம். 'இறையனராகப் பொருள்' உரைப் பாயிரத்திலும் நூலினிடையிடையே எடுத்துக்காட்டுகளிலும் இங்ஙனமே பின்னுள்ளார் சிலர் எழுதிச்சேர்த்த உரைப்பகுதி களையும் கலித்துறைப்பாட்டுகளையும் பிரித்தறியும் அறிவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/83&oldid=1588354" இலிருந்து மீள்விக்கப்பட்டது