உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

2

75

மதுகை யில்லாதார் சிலர், அந் நூலுரை முழுதும் ஆசிரியர் நக்கீரனார் இயற்றியதன்று என எளிதிற் கூறிவிட்டனர். சொற்பொருள் நுட்ப விழுப்பம் வாய்ந்த அத்தகையதோர் அரிய விரிவுரையின் பான்மை, இளம்பூரணர், பேராசிரியர், சேனாவரையர், அடியார்க்கு நல்லார், பரிமேலழகியார், நச்சினார்க்கினியர், என்னுஞ் சிறந்த உரைகாரருரையுள்ளும் யாண்டுங் காணப்படாமையின். அவ் விறையனாரகப் பொருளுரை தெய்வப்புலமை நக்கீரனாரே இயற்றியதாதல் நுண்மாணுழைபுலமுடைய தமிழ்ச் சான்றோர்க்கெல்லாம் விளங்கா தொழியாது. பாயிரத்துட் சில பகுதிகளும், உரையி னிடையிடையே விரவிய சில சொற்றொடர்களும் எடுத்துக் காட்டாக வந்துள்ள கட்டளைக் கலித்துறைப் பாட்டுகளும் ஒழித்து, ஒழிந்த உரைப்பகுதிகள் முற்றும் ஆசிரியர் நக்கீரனார் செந்தமிழ் உரைவளந் உரைவளந் துறும ம எழுதிய பழைய பழைய அருந் தமிழுரையே யாமென்பதூஉம், அதன்கண் எடுத்துக் காட்டப்பட்டுள்ள சங்கத் தமிழ்ப் பாட்டுகள், தொல்காப்பியச் சூத்திரங்கள், திருக்குறள் வெண்பாக்கள் முதலாயினவெல்லாம் அவர் எடுத்துக்காட்டியனவேயா மென்பதூஉம் இற்றைக்கு இருபத்தேழு ஆண்டுகட்கு முன்னரே யாம் வெளியிட்ட ஞானசாகர முதற்பதுமத்தின் 9,10 இதழ்களில் 'இறையனாரகப் பாருளுரை வரலாறு' என்பதன்கண் நன்கு விளக்கிக் காட்டியிருக்கின்றேம். அது நிற்க.

இனி, ஆசிரியர் திருமூல நாயனார் தாமருளிச்செய்த 'திருமந்திர’நூலை ஆகமம் என்றே கூறி, அதனைத் தாம் சிவபிரான் றிருவருளால் இயற்றினதனை,

“நந்தி யிணையடி நான்தலை மேற்கொண்டு புந்தியினுள்ளே புகப்பெய்து போற்றிசெய்து அந்தி மதிபுனை அரன்அடி நாடொறுஞ் சிந்தைசெய்து ஆகமஞ் செப்பலுற் றேனே”

என்று தாமே நன்கெடுத்துரைத்தார். உரைப்பவே பண்டைக் காலத்திருந்த தமி ழ் ஆகம நூல்களெல்லாம் திருமந்திரத்தைப் போல் மெய்ப்பொருள் உண்மையினையே (தத்துவ ஞானத் தையே) கிளக்குமென்பதும் பெற்றாம். இஃதிவ்வாறாகவும் திருமந்திர நூற்பதிப்புக்கு ‘முகவுரை’ எழுதிய ஒரு பார்ப்பனர்6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/84&oldid=1588355" இலிருந்து மீள்விக்கப்பட்டது