உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

மறைமலையம் - 23

ஏதொரு சான்றுங் காட்டாமல் ‘திருமந்திரம்' வடமொழி யாகமங்களினின்று மொழிபெயர்த்துச் செய்யப்பட்டதா மென்றும், 'திருமந்திரமாலை' னஎனும் பெயரிலுள்ள 'மந்திரம்,' 'மாலை' என்னுஞ் சொற்கள் வடசொற்களே யாமென்றும். ஆசிரியர் சேக்கிழார் அருளிச்செய்த பெரிய புராணம் என்னுந் ‘திருத்தொண்டர் புராணம்,' வடமொழியி லுள்ள ‘உபமந்யு பக்தவிலாசகம்,' 'அகத்யபக்தவிலாசம்' என்னும் நூல்களைப் பார்த்துச் செய்யப்பட்டதா மென்றுந் தமக்கு வேண்டியவா றெல்லாங்கூறி மகிழ்ந்தார். வரலாற்றுமுறை வழுவாமல் தக்க சான்றுகள்கொண்டு தமிழாசிரியர்கள் பெரிதும் உழைப்பெடுத்து எழுதும் தமிழ் ஆரிய நூல் வரலாறுகளைப் பிசகென்று முன்பின் ஆய்ந்து பாராமல் உடனே கூறிவிடும் இவர்கள், 'ஆரிய நூல்களே எல்லாச் சிறப்பும் வாய்ந்த முதல்நூல்கள், தமிழ் நூல்கள் அச் சிறப்பில்லா மொழி பெயர்ப்பு நூல்கள்' என்று ஒரு சிறிதும் ஆராய்ந்து பாராது உரைப்பதை எண்ணுங்கால், தாமும் தம்மவரும் இம் மண்ணுலகத் தேவர் களாதலால் தாம் ஏது சொல்லினும் அது மெய்ம்மொழியே யாகல்வேண்டுமெனவும், தம்மவர் அல்லாத ஏனையோ ரெல்லாம் தமக்கு முன்னோ ரென்று தம்மாற் கருதப்பட்ட பழைய ஆரியரால் ‘தாசர்கள்’ 'பிசாசுகள்' என்று இகழ்ந்து பேசப்பட்டவர்களாதலால் அவர்கள் தமிழ்நூல் களைப்பற்றி மெய்யே கூறினும் அது பொய்யேயாகல் வேண்டுமெனவும் பிழைபட எண்ணுதற்கு ஏதுவாய் நின்ற இவர்களின் தீயசெருக்கே இவரையும் இவர்தம் இனத்தவர் களையும் இங்ஙனமெல்லாம் நடுநிலை திறம்பிக் கூவுமாறு ஏவுகின்ற தென்க.

னித், தமிழ்நூல் வ நூல்களின் உண்மை வரலாற்றினை உள்ளவாறு உணரல் வேண்டின், அ தோன்றிய காலம், இடம், அவற்றை ஆக்கிய ஆசிரியர் வரலாறு, அந்நூல் இயற்றியதற்குள்ள ஏது, அவற்றின் வழி, அந் நூல்களால் நுவலப்படும் பொருள் என்பவைகளை நன்கு ஆராய்ந்து உரைத்தல் வேண்டும். பொருளால் ஒத்த இரண்டு நூல்களில் எது முந்தியது? எது பிந்தியது? என்று ஆராய்ந்து பார்த்து, அதன் பின்னும் இடவேற்றுமை முதலியனவும் ஒப்பிட்டு நோக்கித், தக்க சான்றுகள் மேலும் இருந்தால்மட்டும் அவ் விரண்டனுட் பிந்தியநூல் முந்திய நூலிலிருந் தெடுத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/85&oldid=1588356" இலிருந்து மீள்விக்கப்பட்டது