உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 2

77

இயற்றப்பட்ட தென்றல் ஒக்கும். 'திருமந்திரம்' வடமொழி யாகமங்களினின்று மெடுத்துத் தமிழிற் செய்யப்பட்டதென அப்பார்ப்பனர் கூறல்வேண்டினராயின், திருமந்திரத்திற்கு முன் வடமொழியிலிருந்த ஆகமங்கள் இவ்விவையென்று தக்க சான்றுகள் கொண்டு முதலில் அவர் காட்டுதல்வேண்டும்; அதன்பின், அவ் வாகமங்களின் இவ்விப்பகுதியிலிருந்து திருமந்திரத்தின்கண் உள்ள இவ்விப்பகுதி மொழிபெயர்த்துச் சய்யப்பட்ட ன னவென்று உறுதிப்படுத்தல் வேண்டும்; இவற்றுள் ஒன்றுதானுங் காட்டாமல் வாளா ‘திருமந்திரம்’ ஆகமங் களினின்றும் மொழியெர்த்துச் செய்யப்பட்ட தென்றலும், ஆகமங்கள் முதன்முதற் காசுமீரத்திற் கைலைத் தாழ் வரையின்கண் ஆக்கப்பட்டனவென்றலும், அவ்விடத்தின் கண் முதற்றோன்றிய 'பிரத்தியபிஞ்ஞாதரிசனமே' சைவ சித்தாந்தத்திற்குத் தாயகமாம் என்றலும், சிறுமகார் ஒருவரையொருவர் எள்ளி எதிர்கூறும் வெற்றுரையோ டொக்குமெனவே விடுக்கற் பாலன.

சிவாகமங்கள் முதன்முதற் காசுமீரத்தில் இயற்றப்பட்டன வென்பதற்கு இப் பார்ப்பனர் காட்டிய சான்று எத்தனை? “தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை” (திருமந்திரம், 134) என்று திருமூலர் உரைத்ததே சான்றாமெனின்; அவர் 'தத்துவஞானம்' என்று உரைத்தாரே யல்லாமல், ஆகமஞானம் என் று உரைத்திலர். அற்றன்று, தத்துவஞானம் உரைத்த வடநூல் களையே ஈண்டு ‘ஆகமம்’ என்று கொண்டாமெனின்; அற்றேல், தத்துவஞானம் பொதிந்த உபநிடதங்களை ஆகமம் என்று வழங்காமை என்னை? மேலும், 'சுவேதாசுவதரம்’ முதலிய உபநிடதங்கள் முனிவர்களால் ஆக்கப்பட்டன வென்றற்கு, அவற்றுட்சில அவற்றை ஆக்கிய அல்லது கேட்ட முனிவர் களின் பெயர் பூண்டு நிற்றலும், அவ்வுபநிடதப் பொருளைச் சொல்லும் ஆசிரியர் “ ங்ஙனமே அறிஞர் சொல்லக் கேட்டேம்" என்னும் பொருளைப் பயக்கும் "இதிகசீருமதீரோணாம்”17 என்னுஞ் சொற்றொடரை இடைக்கிடையே கிளந்து செல்லுதலுமே சான்றாம். ஆகவே, உபநிடதங்களை இறைவன் அருளிச்செய்தா னென்றலும் சாலாது. இவ்வாறு, உபநிடதங்களை ஆகமங்களெனப் புகலுதலும், அவற்றை இறைவன் மொழிந்தானென

66

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/86&oldid=1588357" இலிருந்து மீள்விக்கப்பட்டது