உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

மறைமலையம் - 23

வாய்ப்பறையறைதலும் ஏலாமை யின், 'தத்துவஞானம்' என்று திருமூலர் அருளிச்செய்தது ‘பதி பசு பாசங்களைப் பற்றிய மெய்யுணர்வு' எனவே பொதுமையிற் பொருள் பயந்து நிற்குமென்க.

அற்றேல், திருமூலநாயனாரே "வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன் நூல்" (திருமந்திரம், 2351) என்று மொழிந்த கருத்து என்னையெனின்; அவர் வேதம் என்றன, பலகோடி சிறுதெய்வ வணக்கங்களையும், கட்குடியும் உயிர்க்கொலையும் மலிந்த வெறியாட்டு வேள்விகளையும் விரித்துப் பண்டை ஆரியக் குருக்கண்மார் செய்த பாட்டுகளே பெரும்பான்மையும் நிறைந்த இருக்கு, எசுர், சாமம் முதலியவைகள் அல்ல. மலந் தீர்தற் பொருட்டு உயிர் தன்னை அதுவாகக் கருதும் ‘சோகம் பாவனை'யை வற்புறுத்துரைக்கும் பழைய உபநிடதங்களைப் போல் அஞ்ஞான்றிருந்த அறிவு நூல்களையே 'வேதம்' என்றும், கடவுளைப் பொதுமையில் வைத்து ‘அது' வென எண்ணின், அவ்வெண்ணம் கடவுளைச் சிறப்பாக நினைத்தற்கு இடந்தர மாட்டாமையின் அது பயன்படாதாயொழிதல் கண்டு, பிற்காலத்துச் சான்றோர் அதனைச் 'சிவம்' எனச் சிறப்பாக வைத்துப் பயிலும் முறையினை விரித்த அறிவுப்பெருநூல் களையே ‘ஆகமம்' என்றும் கொள்ளுதலே திருமூலநாயனாரது திருவுள்ளக்

கிடையாமென்பது.

6

"மன்னிய சோகமாம் மாமறை யாளர்தம் சென்னிய தான் சிவோகமாம் ஈதென்ன அன்னது சித்தாந்த மாமறை ஆய்பொருள் துன்னிய ஆகம நூலெனத் தோற்றுமே'

(திருமந்திரம், 2394)

என்று அவர் அருளிச் செய்தவாற்றால் நன்கு புலனாம். இங்ஙனஞ் சோகம்பாவனையைக் கூறும் வேதநூலும் சிவோகம் பாவனையைக் கூறும் ஆகமநூலும் முறையே வடமொழியாகிய ஆரியத்தினும் தென்மொழியாகிய தமிழினும் அக்காலத்தில் ஒருங்கிருந்தன வென்னு முண்மை ஆசிரியர் திருமூலரே,

“மாரியுங் கோடையும் வார்பனி தூங்கநின்று

ஏரியும் நின்றங் கிளைக்கின்ற காலத்தே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/87&oldid=1588358" இலிருந்து மீள்விக்கப்பட்டது