உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 2 ஆரிய முத்தமி ழும்உட னேசொலிக் காரிகை யார்க்குங் கருணைசெய் தானே"

79

(திருமந்திரம், 75)

18

என்று அருளிச்செய்தவாற்றாற் பெறப்படும். இருக்கு, எசுர், சாமம் முதலானவற்றில் அங்ஙனம் 'சோகம்பாவனை' அறிவுறுத்தும் பகுதிகள் காணப்படாமையின், அதனையறி வுறுத்தும் வேதமென அதனையறிவுறுத்தும் அவராற் கொள்ளப்பட்டவை அவ் இருக்கு முதலியன ஆகாமையுந் தானே தெளியப்படும். அங்ஙனமே, 'சிவோகம் பாவனை’யை வலியுறுத்தும் பகுதிகள் ‘காமிகம்,’ ‘காரணம்’ முதலான இஞ்ஞான்றை வடமொழி யாகமங்களிற் காணப்படாமையின். அதனை வலியுறுத்தும் ஆகமமென அவராற் கொள்ளப்பட்டன. அக் ‘காமிகம்' முதலியன ஆகாமையும் இனிது விளங்கற்பாற்று. அற்றேல், “யான் முன்னர் மனுவாயிருந்தேன். கதிரவனா யிருந்தேன்; யான் கவான் என்னும் முனிவனாயிருக்கின்றேன், யான் விப்பிரனாயிருக் கின்றேன்; ஆர்ஜுனியின் புதல்வனாகிய குத்சனுக்கு யான் ஆண்டவன்; அறிஞனான உசனாவும் யானே; என்னைப் பார்மின்கள்!” என்னும் இருக்குவேதப் பதிகத்தின் முதற்பகுதி ‘சோகம்பாவனை' கூறுவதாய் முடியாதோ வெனின்; அப்பதிகத்தின் மூன்றாஞ் செய்யுளில் “யான் சோமபானத்தைப் பருகிய வெறியாற் சம்பரனுடய கோட்டைகளைத் தகர்த்தேன்” என்று இந்திரனே சொல்லக் காண்டலின், அவன் அக்கட் குடிமயக்கத்தால் “யான் முன்னர் மநுவாயிருந்தேன், கதிரவனா யிருந்தேன்” என்றற்றொடக்கத் துரைகளைப் பிதற்றினனாகலின், இந்திரன் பிதற்றிய அம் மயக்கவுரையைச் ‘சோகம்பாவனை'யின் மேற்றாக வைத்துரைத்தல் ஒருவாற்றானும் பொருந்தாதென மறுக்க. இருக்கு முதலிய வேதங்கள் பொருந்தாப் புல்லுரை நிறைந்த கூளமேயாகுமென்று பண்டைக் காலத்துச் சான்றோர்கள் கூறினர் என்பதை அவ் வேதங்கட்கு 'நிருத்தம்' எழுதிய ‘யாஸ்காசாரியாரே' குறித்திருக்கின்றனர்.19 அவ்வா றிருக்கச், சிவபிரான் ஒருவனையே முழுமுதற் கடவுளாகக் கொண்ட ஆசிரியர் திருமூலர், சிறுதெய்வ வணக்கப் பதிகங்களே பெரும்பான்மையும் நிறைந்த இவ் இருக்கு முதலியவற்றை இறைவன் நூல்' என்று கூறத் துணிவரோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/88&oldid=1588359" இலிருந்து மீள்விக்கப்பட்டது