உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

மறைமலையம் - 23

அற்றேல், ‘அஃது இந்த உயிர்' (சோயமாத்மா)” என்னும் மாண்டூக்கிய உபநிடதமும். 'அது நீ ஆகின்றனை’ (தத்துவமசி)" என்னுஞ் சாந்தோக்கிய உபநிடதமும், 'யான் கடவுளா கின்றேன்’ (அஹம் ப்ரஹ்மாஸ்மி)2 என்னும் பிருக தாரணியக உபநிடதமும் 'சோகம்பாவனை' யினையே வெளிப்படையாய் உணர்த்தக் காண்டலின், அவ்வுபநிடதங்களையே 'இறைவன் நூல்' என்று ஆசிரியர் கொண்டார் என்னாமோ வெனின்; என்னாம். சாந்தோக்கிய உபநிடதம் ஐந்தாம் பிரபாடகம் பதினொன்று முதல் இருபத்துநான்கு வரையிலுள்ள பகுதிகளிற், கல்வியறிவு மிக்க பார்ப்பனக் குருமார் ஐவர் உத்தாலக ஆருணி என்பரைத் தலைவராகக் கொண்டு சென்று, மெய்யுணர்வின் மிக்க வேந்தனான அசுவபதிகைகேயனை யடைந்து அவன்பால் உண்மைப்பொருள் தெளிந்தமையும்; பிருகதாரணியக உபநிடதம் இரண்டாம் அத்தியாயம் முதலாம் பிராமணத்தில் வேதநூல்வல்ல கார்க்கிய பாலாகி என்னும் பார்ப்பனக் குரவன் காசி மன்னனான அஜாதசத்துருவை யடைந்து, அவனுக்கு

முழுமுதற்பொருளியல்பினை அறிவுறுத்துவேனெனப் புகுந்து பிழைபாடான பன்னிரண் டுரைகளைக் கூற, அவற்றைக் கேட்ட அம்மன்னன் அவற்கு அவன் கூறியவற்றிலுள்ள பிழைகளை யெடுத்துக்காட்ட, அப் பார்ப்பனன் தன் அறிவின் சிறுமையுணர்ந்து அவ்வரசற்கு மாணாக்கனாகி அவனால் மெய்ப்பொருள் அறிவுறுக்கப் பட்டமையும் வெளிப்படையாகச் சொல்லப்பட்டிருத்தலின் மக்களால் ஆக்கப்பட்ட அவ்வுப நிடதங்களைக் கடவுள் ஆக்கினானென்றல் ஒவ்வாது. இனி, வருணன் என்னும் முனிவன் மண்டூக (தவளை) வடிவில் நின்று மொழிந்தமையின் 'மாண்டூக்கியம்' என்னும் பெயர்த்தாயிற் றென்று மாதவசாரியார் உரையெழுதி யிருப்பதைக் கொண்டு மாண்டூக்கிய உபநிடதமும் இறைவன் மொழிந்த தன் றென்பது பெற்றாம். பெறவே, இவ்வுபநிடத நூல்களை மெய்யான இறைவன் நூல் என்று கோடலுந் திருமூலர்க்குக் கருத்தன்று என்பது பெற்றாம்.

அற்றாயினும், சிவபிரான் முதன்முதல் நந்தியெம் பெருமானுக்குச் 'சோகம்பாவனை' யைச் சுருக்கமாய் வைத்து அருளிச்செய்த வேதநூற் பொருளும், பின்னர்ச் 'சிவோகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/89&oldid=1588360" இலிருந்து மீள்விக்கப்பட்டது