உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 2

81

பாவனை'யை விரிவாய் வைத்து அருளிச்செய்த ஆகமநூற் ருளும் ஆசிரியர் மாணாக்கர் முறையில் வழி வழியே இறங்கிப், பின்னுள்ளோர் ஆக்கிய உபநிடதங்களிலும் பொன்னே போற் பொதிந்து வைக்கப்பட்டமையின், அப் பொருள்பற்றி உபநிடதங்களை வேதமெனக் கொண்டு அவற்றையும் முகமனாக இறைவன் நூல் என்று திருவாதவூரடி கள், திருமூலநாயனார் என்னும் இவரையுள்ளிட்டுவந்த சைவ சமயாசிரியன்மாரெல்லாம் உரைப்பாராயினாரெனின், அஃது ழுக்காது; இத்துணையே த்துணையே யன்றி, இ வை இறைவனே மொழிந்த உண்மை அல்லவென்று கடைப்பிடிக்க.

முதல் நூல்கள்

ம்

ச்

இங்ஙனமே, 'வேதாங்கங்கள்' எனப்படும் சிட்சை, சந்தசு, வியாகரணம், நிருத்தம், கல்பம், சோதிடம் என்னும் ஆறனையும் சிவபிரான் அருளிச்செய்தன னென்று தேவார திருவாசகங் களுள் அடுத்தடுத்து ஓதப்படுதலும் முகமனுரையேயாம். வேதநூல்களிற் போந்த பதிகங்களை ஓது முறையும் எழுத்துக்களைத் திருத்தமாய்க் கூறுமுறையுங் காட்டுவதே 'சிட்சை'யாகும். சிட்சைக்குரிய இலக்கணங்களை விரிக்கும் நூல்கள் ‘பிராதிசாக்கியங்கள்' எனப்படும். இவை ஒவ்வொரு வேதத்திற்குந் தனித் தனியே உள்ளன. இருக்குவேத பிராதிசாக்கியங்களை இயற்றினவர் ஆசுவலாயனார்க்குக் குருவான சௌனகரேயாவர். இனிச், ‘சந்தசு’ வென்பது வேதத்திற் போந்த செய்யுடகளின் இலக்கணங்கூறுவது செய்யுளிலக்கணம் இருக்குவேத பிராதி சாக்கியத்தின் இறுதியிலுள்ள மூன்று படலங்களிலேயே சொல்லப்பட்டிருக் கின்றது. பிங்கலரால் இயற்றப்பட்ட செய்யுளிலக்கண நூலும் தனியேயுண்டு; ஆயினும், இது மேற்காட்டிய பிராதி சாக்கியத்திற்குப் பிற்பட்டதேயாகும். இனி, 'வியாகரணம் என்பது சொல்லிலக்கணங் கூறுவது இவ்விலக்கணங் கூறும் நூல்கள் 'பாணினீயத்'திற்கு முன்னரே பற்பல உளவாயினும். பாணினி முனிவர் இயற்றிய இலக்கண நூலே பிற்காலத்தவராற் பெரிதும் பாராட்டப்படுகின்றது. இனி, 'நிருத்தம்’ என்பது வேதத்திற் போந்த சொற்களுக்குப் பொருள் அறிவிக்கும் நிகண்டு நூலாகும். இத்தகைய நூல்களும் பழைய காலத்திற் பற்பல உளவாயினும். யாஸ்காசாரரியாராற் செய்யப்பட்டதே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/90&oldid=1588361" இலிருந்து மீள்விக்கப்பட்டது