உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

13. கட்குடிப்பாட்டும் சூதாட்டப்பாட்டும் இருக்கு வேதத்தில் காணப்படல்

இத்துணைப் பெரும் பொய்யரும் புரட்டருமான ஆரியப்பார்ப்பனரை 'மெய்யர்' என்றும், எஞ்ஞான்றும் மெய்யே கூறுவாரான பழைய தமிழ்மக்களைப் ‘பொய்யர்' என்றும் தம்மை ஆரியப்பார்ப்பன இனத்திற் சேர்த்துக் கொண்ட சீநிவாச ஐயங்கார் என்பவர் தாம் ஆங்கிலத்தில் எழுதிய ‘தமிழாராய்ச்சிகள்” என்னும் புத்தகத்தில் நெஞ்சம் அஞ்சாமல் ஒருபேர் இகழ்ச்சிப் புரட்டுரையினை வரைந்து வைத்து ஒழிந்தார்! அதுவேயுமன்றி ‘அற நூல்களே' பழைய தமிழ்நூல்களில் மிகுந்தித்தலால், தமிழர்கள் அறவொழுக்கம் இல்லாதவர்களென்பதும் பெறப்படும் என்று அவ்வையங்கார் கூறினர்.? உண்மையை யுள்ளவாறே கூறும் பழைய சங்கத்தமிழ் நூல்களையும், பொய்யும் புரட்டும் அளவின்றி நிறைந்த வடநூல்களையும் ஒரு சிறிது ஒப்பிட்டு நோக்குவார்க்கும் எவர் பொய்யர் எவர் மெய்யர் என்பது எளிதில் விளங்காநிற்கும். பழைய தமிழ்நூல்களிற் பொய்க்கதைகள் மருந்துக்கும் அகப்படா இடைப்பட்ட காலத்திலிருந்து தமிழில் வந்த வடநூல்களிலிருந்து மொழி பெயர்த்துச் செய்யப்பட்டனவே யல்லாமல் அவை தமிழுக்கு உரியனவல்ல அக்காலத்துத் தமிழர்களில் உயர்குடிப் பிறப்பினருங், "கொடுமேழி நசையுழவரும்”3 ஆகிய வேளாளர் “நடுவுநின்ற நன்னெஞ்சினராய்,” “வடுவஞ்சி வாய்மொழிந்து” வாழ்ந்தனரெனப் பட்டினப்பாலை என்னும் பழைய அருந் தமிழ்ப்பாட்டில் அதனை ஆக்கிய அந்தணராகிய உருத்திரங் கண்ணனாரே கூறியிருக்க, இவற்றுக்கெல்லாம் முற்றும் மாறாக ஏதொரு சான்றுமின்றி மெய்யராகிய தமிழரைப் பொய்ய ரெனவும், பொய்கூறுதற்கு அஞ்சா வடமொழிப் பார்ப்பனரை

புராணகதைகளெல்லாம்

4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/95&oldid=1588367" இலிருந்து மீள்விக்கப்பட்டது