உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ய

87

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 2 மெய்யரெனவுங் கூறிய சீநிவாச ஐயங்காரது பிறழ்ச்சிப் பொய்யுரை நடுநிலையாளரால் அருவருத் தொதுக்கற் பாலதாமென்க.

இனி, ஒழுக்கநூல்கள் தமிழின்கண் மிகுந்திருத்தல் கொண்டு அக் காலத்துத் தமிழர்கள் ஒழுக்க மில்லாதவர்கள் என்ற அவ்வையங்காருரையும் புரைபடு பொய்யுரையாதல் ஒரு சிறிது காட்டுவாம். மேற்காட்டிய ‘பட்டினப்பாலைச் செய்யுளானும், 'புறநானூறு' முதலிய தொகை நூல்களானும் அக்காலத்திருந்த தமிழ்மக்களும், சான்றோரும், அரசர்களும், மாதரும் எல்லாம் அன்பு அருள் ஈகை அறங்களிற் சிறந்து, கொலை களவு பொய் கட்குடி காமம் என்னும் பெருங் குற்றங்களைத் தவிர்ந்து, நடுநிலையிலுங் கற்பினும் மேம்பட்டு விளங்கின ரென்பது தெற்றெனப் புலப்படும். அவ்வியல்பினை விரிப்பிற் பெருகுமாதலின், ஈண்டு ஒரு செய்யுளைக் காட்டும் முகத்தான் அதனைச் சுருங்க விளக்குவாம். கோப்பெருஞ் சோழன் என்னும் அரசன் கேள்வி வாயிலாகத் தான்அன்பு பாராட்டிவந்த பிசிராந்தையாரைப் பன்னெடுங்காலஞ் சென்று காணநேர்ந்தக்கால், அவரது இளமைத் தோற்றத்தைக் கண்டு வியந்து, "கேட்குங்காலம் பலவாலோ, நரை நுமக்கு ல்லையாலோ” என்று வினாவியவழி, அப்புலவர்,

66

'யாண்டுபல வாக நரைஇல ஆகுதல்

யாங்கா கியரென வினவுதி ராயின்,

மாண்டஎன் மனைவியொடு மக்களும் நிரம்பினர், யான்கண் டனையர்என் இளையரும், வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும், அதன்றலை ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்

சான்றோர் பலர்யான் வாழும் ஊரே”5

என்னுஞ் செய்யுளை விடையாகக் கூறினர். இதன்கண் தம் மனைவி கற்பின் சிறந்துவிளங்கத் தம் புதல்வர் அறிவான் மிக்கிருந்தமையானும், தமக்கு ஏவல் செய்வோருந் தங் கருத்துப்படி உண்மையாய் ஒழுகி வந்தமையானும், தமது நாட்டின் அரசனும் தீயவற்றைச் செய்யானாய் முறைப்படி செங்கோல் செலுத்தினமையானும், அதற்குமேல் தமதூரின்கட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/96&oldid=1588371" இலிருந்து மீள்விக்கப்பட்டது