உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

மறைமலையம் - 23

சான்றோர் பலர் நல்லியல்புகள் அமைந்து, தாழ்மையும், கல்வி கேள்விகளின் மிகுந்து அடங்கிய அடக்கமும் உடையராய் நிறைந்திருந்தமையானுந் தாம் கவலையுந் துன்பமும் எய்தாமல் உயர்ந்த இன்பத்திலேயே நாட்கழித்தமையின் தமக்கு முதுமை வந்திலது என்றார். எனவே, அக்காலத்துத் தமிழ்மக்கள் அன்பு அருள் அறிவு ஒழுக்கம் என்னும் வகைகளில் மிக மேம்பட்டி ருந்தமை நன்கு பெறப்படும்.

6

அற்றேல், ஒழுக்கத்தில் உயர்ந்தோராய் விளங்கிய அவரிடையே ஒழுக்கமுறைகளை அறிவுறுத்தும் ‘திருக்குறள்,’ நாலடியார்' முதலான நூல்கள் பலப்பல தோன்றியவா றென்னை யனின்; தமிழின்கண் உள்ள உள்ள ஒழுக்க நூல் களெல்லாம் பௌத்தசமயக் காலத்திற்குப் பின், பௌத்தரும் ஆரியரும் தமிழ் நாட்டின்கண் வந்து குடியேறப்புகுந்த காலந்தொட்டு உண்டாயினவாகும். பௌத்த சமய காலத்திற்கு முற்பட்ட தமிழ்நூல்களெல்லாம் அகப்பொருள் புறப்பொருள் களைச் சுவைமுதிரப் பாடும் பாடல்கள் வாய்ந்தனவா யிருக்கின்றன; 'பரிபாடல்,' 'கலித்தொகை,’ ‘அகநானூறு, புறநானூறு' முதலியவற்றின் கட் காணப்படும் பழம்பாடல் களே அதற்குச் சான்றாம். மற்றுப், பௌத்தரும் ஆரியரும் தென்னாடுபோந்து குடியேறினகாலம் முதலாக அவர்க்குரிய தீய இயல்புகளையும் ஒழுக்கங்கயுைம் தமிழ்மக்களிற் பலருந் தழுவி நடக்கப்புகுந்தமையின், அவர் தம்மைச் சீர்திருத்தி மீட்டுந் தம் வழிப்படுதல் வேண்டியே தமிழ்ச் சான்றோர்கள் அங்ஙனம் ழுக்கநூல்களைப் பெருக்கி எழுதலாயினாரென்க. இவ் வுண்மையினைத் ‘திருக்குறள்' ஒன்றைக்கொண்டே விளக்கிக் காட்டுவாம். ஏனைத்தமிழ் ஒழுக்க நூற் பொருள்களெல்லாம் ‘திருக்குறளில்' அடங்குதலின் அவற்றை எடுத்திலம். ஆயினும், சைவசமய நூல்களில் முற்பட்டதாகிய 'திருமந்திரநூற்' பொருளும், பழைய தமிழ்ச்சான்றோர் கொள்கையோடு ஒத்ததென்பதற்கு அதன்கணிருந்துஞ் சிற்சில மேற்கோள் காட்டுதும்.

பௌத்தசமயத்தின்

பழைய பெரும்பிரிவினரான ஈனயானர்கள் பிறவியை அஞ்சி அதனை யொழித்தல் வேண்டின ராயினும், முழுமுதற் கடவுளை நம்பாமையின் அவர்கொண்ட கொள்கை தவறென அறிவித்தற் பொருட்டே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/97&oldid=1588375" இலிருந்து மீள்விக்கப்பட்டது