உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

எனவும்,

66

மறைமலையம் - 23

“ஆறிடும் வேள்வி அருமறை நூலவர் கூறிடும் அந்தணர் கோடிபேர் உண்பதில் நீறிடுந் தொண்டர் நினைவின் பயன்நிலை பேறெனில் ஓர்பிடி பேறது வாகுமே”

எனவும், அருளிச்செய்தமை காண்க.

8

(1861)

இனி, ஆரியப் பார்ப்பனர் சோமப்பூண்டின் சாற்றினாற் சமைத்த கள்ளை மிகுதியாய்ப் பருகி வெறித்திருந்தன ரென்பதும், சூதாட்டத்தில் நிரம்ப இறங்கிப் பலவகையான அல்லலுக்கு இரையாயின ரென்பதும் இருக்கு வேதத்திற் றெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. சோமச்சாற்றின் ஆக்கிய கள் மிக்க வெறியினைத் தருவதென்பது அதனைப் பருகிய ஒருவன் அவ்வெறியிற் பாடிய இருக்குவேதப் பாட்டு ஒன்றால் நன்கு புலனாகின்றது. அப்பாட்டின் ஒரு பகுதியை இங்கே மொழி பெயர்த்துக் காட்டுவாம்:

L

“இதுதான் எனது தீர்மானம், ஓர் ஆவினை வென்று கைக்கொள்ளல்வேண்டும். ஒரு குதிரையை வென்று கைக் கொள்ளல்வேண்டும்; யான் சோமச் சாற்றைப் பருகி யிருக்கின்றேன் அல்லேனோ

கடும் புயற்காற்றைப் போல, யான் பருகியிருக்குங் கள் என்னை உயரத் தூக்கிச்செல்கின்றது; யான் சோமச்சாற்றைப் பருகியிருக்கின்றேன் அல்லேனோ?

விரைந்து பறக்குங் குதிரைகள் ஒரு தேரை இழுத்துச் சல்வதுபோல, யான் பருகியிருக்குஞ் சாறு என்னை மேலே சுமந்து செல்கின்றது; யான் சோமச் சாற்றைப் பருகியிருக் கின்றேன் அல்லேனோ?

  • * *

வானுலகும் மண்ணுலகுங் கூட என் ஒருபாதிக்கு ஈடாகமாட்டா; யான் சோமச் சாற்றைப் பருகியிருக்கின்றேன் அல்லேனோ?

  • * *
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/103&oldid=1588404" இலிருந்து மீள்விக்கப்பட்டது