உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 2

93

என்னும் பார்ப்பனர் பிறன்மனையாளைச் சென்று கைப்பற்றி னால் அவர் இழிந்தாரேயாவரென்பதூஉம், தம் மனையாளைப் பிறர் கைப்பற்றுதல் பெருந்தீங்கென் றுணர்ந்த பார்ப்பனர் பிறர் மனையாளைத் தாஞ்சென்று கைப்பற்றுதலும் பெருந்தீங் கென்று உணராமை குற்றமேயாமென்பதூஉம் நன்கெடுத்து அறிவுறுக்கப்பட்டமை காண்க. சைவசித்தாந்த முதலாசிரிய ரான திருமூலரும் மேற்காட்டிய திருவள்ளுவனார் கருத்தோடு ஒப்பவே.

“சத்தியம் இன்றித் தனிஞானந் தானின்றி ஒத்த விடயம்விட்டு ஓரும் உணர்வின்றிப் பத்தியும் இன்றிப் பரன்உண்மை இன்றிப் பித்தேறும் மூடர் பிராமணர் தாம் அன்றே'

எனவும்,

“அந்தண்மை பூண்ட அருமறை யந்தத்துச் சிந்தைசெய் அந்தணர்"

எனவும்,

6

66

"நூலுஞ் சிகையும் நுவலிற் பிரமமோ

எனவும்,

وو

"வேதாந்தங் கேட்க விரும்பிய வேதியர்

எனவும்,

வேதாந்தங் கேட்டுந்தம் வேட்கை ஒழிந்திலர்”

“மூடங் கெடாதோர் சிகைநூன் முதற்கொள்ளில் வாடும் புவியும் பெருவாழ்வும்”

எனவும்,

66

(81)

(84)

(80)

(89)

(98)

“ஞானமிலாதார் சடைசிகை நூல்நண்ணி ஞானிகள்போல நடிக்கின்றவர் தம்மை"

எனவும்,

“பேர்கொண்ட பார்ப்பான் பிரான்றனை அர்ச்சித்தாற்

(99)

போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்”

(502)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/102&oldid=1588399" இலிருந்து மீள்விக்கப்பட்டது