உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

என்றும்,

மறைமலையம் - 23

“மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங் கற்றார் அனைத்திலர் பாடு”

என்றும்,

66

"விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர்’

என்றும்,

“எனைத்துணைய ராயினும் என்னாந் தினைத்துணையுந் தேரான் பிறன்இல் புகல்"

என்றும்,

“தன்னுயிர்க்கு இன்னாமை தான் அறிவான் என்கொலோ மன்னுயிர்க்கு இன்னா செயல்”

என்றும் அறிவுறுத்தி அப் பார்ப்பனரையும், அவர்தம் பொய்ம்மாய வலையிற்சிக்கிய தமிழரையும் அறிவு தெருட்டுவா ராயினர். இச்செய்யுட்களில்: மக்கள் எல்லாரும் நரைதிரை மூப்புப் பிணி சாக்காடும், அறியாமை கவலை துன்பம் முதலியனவும், மல நீர்க்கழிவுகள் முடைநாற்றம் முதலான வாலாமையும் இயற்கையே வாய்ந்த ஊனுடம்பின் பிறப்பினராய் இருத்தலின் அவர் எல்லாரும் பிறப்பளவில் ஒரு தன்மையரேயன்றி ஒருவர் மற்றொருவரின் உயர்ந்தோராதல் செல்லாதென்பதூஉம். அந்தணர்' எனப்படுவோர் அறவொழுக்கத்தின் வழுவாது ஒழுகி எல்லா உயிர்களிடத்தும் அருளுடையரேயாவ ரல்லது அறனும் அருளும் இல்லாதார் அப் பெயர்க்குரியரல்ல ரென்பதூஉம், நல்லொழுக்கம் இல்லாதவன் ஒரு காலத்தும் பார்ப்பனனாகமாட்டானென்பதூஉம், பிறர்பாற் சென்று அவர் பொருளை இரந்துபெறுவது இழிவேயாமல்லது உயர்வாகா தென்பதூஉம் கல்லாத பார்ப்பனர் தம்மை உயர்ந்த குலத்தின ரென்று தாமே சொல்லிக்கொண்டாலும் அவர் கல்வி யறிவுடைய கீழ்க்குலத் தாரினுங் கடைப்பட்டவரே யாவரென்பதூஉம். கல்வி யில்லாதவர் மிருகங்களை (விலங்குகளை) ஒப்பர். கல்வி யுள்ளவரே மக்களாவ ரென்பதூஉம், தம்மை யுயர்ந்தோர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/101&oldid=1588394" இலிருந்து மீள்விக்கப்பட்டது