உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 2

99

நூல்களால் இனிது புலனாகின்றது. நிதான சூத்திரம் (3, 81), "பெண்மக்கள் தமது நடையில் ஒழுங்கில்லாதவர்களா யிருக்கின்றார்கள். மக்களையுந் தேவரையுஞ் சான்றாகக் காண்டு, யான் எவர்க்குப் புதல்வனென்று உறுதி கூறுகின்றேனோ அவர்க்கே யான் புதல்வனாவேன்; யான் எவரை என் பிள்ளைகளென்று குறிப்பிடுகின்றேனோ அவரும் அங்ஙனமே ஆகுக" என்று சொல்வது கொண்டும், வருணப் பிரகாசம் என்னும் வேள்வியை வேட்கும் குரவன்றன் மனைவி பலரைக் கூடியிருக்கவேண்டுமெனக் கருதி, அவளை அவன் வேள்விக் களத்திற்குக் கொண்டு வருகையில் “நீ எவ்வெவரோடு கூடியிருந்தனை?” எனக் கேட்டு அவள் வாய்மொழி வினவுதலைச் சதபதபிராமணங் (2, 5, 2, 20) கூறுதல் கொண்டும் பண்டை ஆரியப் பார்ப்பன மாதரின் காமவொழுக்கம் இனைத் தென்பது துணியப்படுகின்ற தன்றோ? இத் தன்மையரான ஆரிய மாதர் தென்றமிழ் நாட்டிற் குடிபுகுந்திருந்தமையின், அவரைப் போற் றமிழ்மாதருங் கற்பின் பொருட்டே திருவள்ளுவ நாயனார்.

6

“பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னுந் திண்மை யுண்டாகப் பெறின்.”

எனவும்,

“தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை

எனவும்,

“தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்

வழுவாமைப்

எனவுங் கற்பொழுக்கத்தின் மேம்பாட்டை உயர்த்தெடுத்

துரைப்பாராயினர்.

மேலும், தங் கணவனாற் புதல்வர்ப்பேறு வாயாத ஒரு மாது தன் கணவனது கட்டளைப்படி வேறு ஆடவரை மருவிப் புதல்வர்ப் பெறுமாறும், கைம்பெண்ணைக்கூடிப் புதல்வர்ப் பெறுமாறும் மனுமிருதி, ஒன்பதாம் இயலில், 59, 60, 61ஆம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/108&oldid=1588428" இலிருந்து மீள்விக்கப்பட்டது