உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 2

131

அற்றேல், திருஞானசம்பந்தர் சிறுமகவாயிருந்த காலத்து அம்மையப்பரால் நேரே அருட்பால் ஊட்டப் பெற்றமைக்கு அகச்சான்று அவரருளிச்செய்த செந்தமிழ்ப் பாக்களுள் உளதோவெனின் ; 'மாணிக்கவாசகர் வரலாறு' 131, 132 -ஆம் பக்கங்களில்,

“போதையார் பொற்கிண்ணத்து அடிசில் பொல்லாதுஎனத் தாதையார் முனிவுறத் தான்எனை ஆண்டவன்”

என்று திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய பாடலினை எடுத்துக்காட்டி அவ்வியல்பினை விரித்து விளக்கியிருக் கின்றேம். மேலும், திருஞானசம்பந்தப் பெருமான் ‘திருநனி பள்ளி'யிலுள்ள சிவபிரானை வணங்குதற்குச் சென்றபோது, அவர் தம் தந்தையாரது பிடரிமேல் இருந்த படியாய்த் திருப்பதிகங் கட்டளையிட்டருளினாரென்பது அப்பதிகத்தின் ஈற்றில்,

66

'ஞானமுனிவன்

இடுபறையொன்ற அத்தர் பியல்' மேல் இருந்து இசையா லுரைத்த பனுவல்”

என்று அருளிச்செய்த வாற்றாற் பெறப்படும். தந்தையின் பிடரிமேல் அமர்ந்திருக்கத்தக்க குழந்தை மூன்று முதல் ஐந்தாண்டிற்கு மேற்பட்டிருத்தல் ஆகாமையால், திருஞான சம்பந்தர் இத்திருப்பதிகத்தை அருளிச்செய்த காலத்துச் சிறுமதலையாயிருந்தா ரென்பது இனிது துணியப்படுமன்றே? இன்னும், மதுரையிற் கூன்பாண்டியன் மனைவி மங்கையர்க் கரசியரால் அழைக்கப்பட்டு அங்குச் சென்ற காலத்தும் திருஞானசம்பந்தர் சிறுபிள்ளையாகவே யிருந்தாரென்பது, அவரைச் சமணர்கள் பழித்துப் பேசிய போதுஅவர் அருளிச் செய்த,

“மானின் நேர்விழி மாத ராய்வழு திக்கு மாபெருந் தேவிகேள் பால்நல் வாய்ஒரு பாலன் ஈங்கிவன் என்று நீபரிவு எய்திடேல் யானை மாமலை யாதியாய் இடங்க ளிற்பல அல்லல்சேர்

ஈனர் கட்குஎளி யேன்அ லேன்திரு வால வாய் அரன் நிற்கவே.”

என்னுந் திருப்பாட்டின்கண் அப்பெருமான் தன்னைப் ‘பால் பருகுதலால் மணங்கமழா நின்ற வாயினையுடைய ஒருசிறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/140&oldid=1588568" இலிருந்து மீள்விக்கப்பட்டது