உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

  • மறைமலையம் - 23

குழந்தை' என்று குறிப்பிடுதல் காண்க. மதுரைக்குச் சென்ற போதே அவர் சிறு பிள்ளையாயிருந்தமை தெளியப் படுதலின், றைவனையும் றைவியையும் அவர் அவர் நேரே கண்டு அவர்தம்மால் அருட்பால் ஊட்டப்பட்ட ஞான்று, மூன்றாண் டுடைய மிகச் சிறு மகவாய் அவர் இருந்தமை சிறிதும் ஐயமின்றித் துணியற்பாலதாகும். இவ்வாறு திருஞானசம்பந்தர் சிறு மதலையாயிருந்தபோதே கடவுளைத் தமது கட்புலனால் நேரே கண்டு அருள்பெற்றுச், செயற்கரும் புதுமைகளெல்லாம் அக்கடவுள் அருளாற் செய்து, உலகிற்கு முழுமுதற் கடவுளின் உண்மையினையும் அக்கடவுளின் அருட்பெருந்தன்மை வினையுந் தெருட்டின மைக்கே அகச்சான்று புறச்சான்றுகள் காணப்படு தலின், அவர் மூவாண்டிற்கடவுளைக் கண்டு பாடினமையே உண்மை நிகழ்ச்சியாதல் காண்க. இவரைப்போல் நம்மாழ் வாரும் சிறு மகவாயிருந்த ஞான்றே கடவுளைக் கண்டு பாடினமைக்கு அவரது ‘திருவாய்மொழி’ப் பாட்டுகளில் ஏதொரு சான்றுங் காணப்படாமையின், நம்மாழ்வாரைப் பற்றிய கதை பின்வந்த வணவப் புலவராற் புதிதாய்க் கட்டிவைக்கப் பட்ட பொய்க்கதையேயாதல் 'உள்ளங்கை நெல்லிக்கனி' போற் சிறிது ஆராய்ந்து காண்பார்க்கும் இனிது விளங்கா நிற்கும்.

ஊன்

அதுவேயுமன்றி, நம்மாழ்வார் பிறந்த ஞான்று தொட்டே பாலும் உண்ணாது பதினாறாண்டளவும் தவத்திலிருந்தா ரென்பது சிறிதும் நம்பற்பாலதன்று. அவர் பத்துத் திங்கள் அன்னையின் கருப்பையிற் றங்கிப் பிறந்தா ரென்றமையால், அவர் எம்மனோரைப்போலவே ஊனுங் குருதியும் நிறைந்த உடம்பு உடையரென்பது பெறப்படும். படவே, உடம்புடைய எம்மனோரெல்லாம் உணவின்றி உயிர்வாழ்தல் ஒருவாற்றானும் ஏலாமையால், நம்மாழ்வாரும் ஏதேனும் உணவு கொண்டே உயிர்வாழ்ந் தாராதலுந் தானே பெறப்படும். இவ்வுண்மைக்கு மாறாக நம்மாழ்வார் பிறந்தநாட் டொட்டே பாலுமுண்ணாது தவங்கிடந்தா ரென்றலினும் பெரும்புளுகுரை பிறிதுண்டோ நடுநிலையுடையீர் கூறுமின்! இப்புளுகுரையை நடுநின்று ஆராய்வாரெவரும், இக்கதை நெறி திறம்பிய மதப்பற்றுடைய வைணவரால் நம்மாழ்வாரைத் திருஞான சம்பந்தரினும் மேம்பட்டவராக ஆக்கிவிடுதற் பொருட்டுக் கட்டப்பட்ட பொய்க்கதையோ யாதலைக் கண்டுகொள்வர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/141&oldid=1588569" இலிருந்து மீள்விக்கப்பட்டது