உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 2

133

இனி, மாணிக்கவாசகப்பெருமான் தமது இளமைக் காலத்தே எல்லாக் கலைகளையும் ஓதியுணர்ந்து வளர்ந்தமை உண்மையே யாயினும், அவர் அதுபற்றிக் கடவுட்டன்மை யுடையரல்லர் என்று கூறிய ‘தமிழ் வரலாறு' உடையாரது உரை உண்மையறியா வெளிற்றுரையேயாம். மாணிக்க வாசகர் தாம் கண்டமையும், அவர்க்குத்

கடவுளை

நேரே

அடிமையானமையும்.

66

“திகழாநின்ற திருமேனி காட்டி

66

என்னைப் பணிகொண்டாய். “

L

தாம்

(குழைத்த பத்து.10)

என்று தாமே அருளிச்செய்தவாற்றாற் குறிப்பிட்டிருக் கின்றார். அவ்வியல்பெல்லாம் முன்னரே வரையில் விரித்து விளக்கிக்காட்டி யிருக்கின்றேமாதலால், அவற்றையே ஈண்டு மீளவும் எடுத்து விரித்திலம். கடவுளை நேரே காண்டல் எளிதன்று. உலகத்தில் மக்களாய்ப் பிறந்தார் படும்பாடெல்லாங் கட்புலனாகக் கடவுளைக் கட்புலனாற் கண்டு உண்மை தெளிந்து, பிறவியறுத்து, அவன் றிருவடியைத் தலைக் கூடுதலையே பொருளாய்க் கொண்டுநிற்கின்றன. அத்துணைப் பெறற்கரும் பொருளாகிய கட வுளை நேரே காணப்பெற்று அவன் றிருவடிக்கு ஆளானாரிலுங் கடவுட்டன்மையுடையார் பிறர் உளரோ புகலுமின்! கடவுளைக் கண்டவர்க்கே கடவுட்டன்மை யுளதாமன்றி, அவரைக் காணாதவர்க்கு அஃது உளதாதல் யாங்ஙனம் உரைமின்! கடவுளை நேரே கண்டு அவன் றிருவருளை நேரே பெற்ற மாணிக்கவாசகரும் திருஞானசம்பந்தரும் அக் கடவுளைப் பற்றிக் கூறும் மெய்ம்மொழிகள் நமக்கெளியவாய் அருகிருப்ப, அவற்றைக் கைக்கொண்டு பிறவிப் பயன்பெறாமற், கடவுளைக் காணாதாரையும் அவர் கூறும் மயக்க வுரைகளையும் நம்பிக் கடவுள் அல்லாத மக்களைக் கடவுளெனத் துணிந்தும், கடவுளைக் காணாதாரைக் குரவரென இறுகப் பற்றி அவர் மேற் பொய்க்கதைகளை ஏற்றியும், சைவம் வைணவம் என்று வழக்காடியும் ஐயகோ மக்கள் தம் பிறவிப்பயனை இழந்து வாளா மடிகின்றனரே! அதுகிடக்க.

இனி,

நம்மாழ்வார்

யற்றிய பாடல்களையே நன்காராய்ந்து பார்ப்பின் அவர் ஓதாதுணர்ந்தவரல்ல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/142&oldid=1588570" இலிருந்து மீள்விக்கப்பட்டது