உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 2 சீதங்கொள் வயற்றிருப் பெருந்துறை மன்னா சிந்தனைக் கும்அரி யாய்எங்கள் முன்வந் தேதங்கள் அறுத்தெமை யாண்டருள் புரியும்

எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே."

காண்க.'நாரதர்'

173

என்னுந் திருவாசகச் செய்யுட்களையும் ஒப்பிட்டு நோக்குக. தொண்டரடிப் பொடியாழ்வார்ருடைய செய்யுட்களில், 'தும்புரு நாரதர்,' 'கின்னரர்' 'கெருடர்' கந்தருவர்’ ‘சாரணர்’, இயக்கர்’,‘சித்தர் முதலிய வடமொழித்தேவர் முனிவர் பெயர்கள் ஒரு தொடர்ப்படக் கூறப்படுதல் போலத் ‘திருவாசகத்'தும் அதற்கு முந்திய தமிழ்நூல்களிலுங் கூறப்படாமை காண்க. ‘நாரதர்’ என்னும் முனிவர் பெயர் 'சிலப்பதிகாரத்’திற் காணப்படினுந் 'தும்புரு' என அடையடுத்த அப்பெயரும், ‘கின்னரர்’ என்னும் பெயரும் பழைய நூல்களுள்ளுந் திருவாசகத்துங் காணப்படா. சாரணர், இயக்கர், சித்தர் முதலான ஏனைப்பெயர்கள் சிலப்பதிகாரம் முதலிவற்றுள் அருகி ஒரோவிடங்களிற் காணப்படினும், இவ்வாழ்வார் தம் பாட்டுக்களினும் ஏனைப் பிற்காலத்தார் பாட்டுக்களினுங் காணப்படுமாறு போல, அவைஅங்ஙனம் பெருவரவினவாய் அவற்றின்கண் ஒருசேரக் காணப்படா.மேலும், விடியற்காலையிற் கோயிற்கதவந் தாழ்நீக்கித் திறக்கும்பொழுது புகர்நிறமுள்ள ஆவினையுங் கண்ணாடியினையுந் திருமாலுருவத்தி னெதிரே காண்டு செல்லும்பிற்காலத்து வழக்கம் மேலெடுத்துக் காட்டிய இவ்வாழ்வரது முதற்பாட்டிற் சொல்லப்பட்டாற் போற் பழைய நூல்களில் எங்கும் காணப்படுகின்றிலது. இவ்வாழ்வார் 'திருப்பள்ளியெழுச்சி' நான் க காஞ்செய்யுளில் "மாமுனி வேள்வியைக் காத்து அவபிரதம், ஆட்டிய அடுதிறல் அயோத்தி எம்மரசே” என்று பாடியிருக்கின்றார்; இதன்கண் ஓசைமுழக்கம் உடைய ‘அவபிரதம்' என்னும் வடசொல்லும், அச் சொல்லாற் குறிக்கப்படும். 'வேள்வி முடிவிற் செய்யும் நீராட்டும் இவ்வாழ்வார் இருந்த காலத்திற் புகுந்தனவேயல்லாமல் இவர்க்கு முற்பட்ட சைவ வைணவத் தமிழ்நூல்களிற் காணப்படா. இன்னும் இவர் "காம்பறத்தலை சிரைத்தலைத்”3 தமது ‘திருமாலை'யுட் கூறுகின்றார். தமிழ்நாட்டில் மயிர்முடிகளைதல் முன்னரே யுண்டேனும், அதனைச் ‘சிரைத்தல்' என்னுஞ்

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/182&oldid=1588619" இலிருந்து மீள்விக்கப்பட்டது