உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

  • மறைமலையம் - 23

சொல்லாற் கூறல் பிற்காலத்து வழக்கேயாம். அதுவேயுமன்றி, ‘அச்சுதன்’ ‘பிராயம்’, ‘மனிசர், 'கத்திரபந்து’, ‘கெருடவாகநன், 'முற்கலன்' ‘ஊனகாரகர்', 'மருதர்’ ‘வசுக்கள்' 'குமரதண்டம்' முதலான பிற்காலத்துப் புகுந்த வடசொற்களையுந் தம்முடைய செய்யுட்களில் இடையிடையே விரவவைத்தனர். இன்னோரன்ன சொற்களுஞ் சொற்றொடர்களுந் 'தேவார திருவாசகங்’ களினாதல், பொய்கை பேய் பூதம் என்னும் முதலாழ்வார் பாடல்களினாதல் காணப்படாமையின், தொண்டரடிப் பொடியாழ்வார் தேவார திருவாசக காலத்திற்கு மிகவும் பிறபட்டவராதலை நுணுகிய தமிழ் நூலாராய்ச்சி வல்லார் எளிதில் கண்டுகொள்வர். மேலும் இவ்வாழ்வார் திருமாலைப் ‘பித்தன்’4 என்று ஓரிடத்துக் கூறினர். சிவபிரானைப் ‘பித்தன்’ என்று நுவலுதற்கேற்ற அருள்விளையாட்டுக்கள் அவன் உடைமைபற்றிச் சைவசமய ஆசிரியர்களே அப் பெருமானைப் ‘பித்தன்' என்று அடுத்தடுத்தழைத்துப் பாடா நிற்பர். 'பிட்டு நேர்பட மண் சுமந்த பெருந்துறைப் பெரும்பித்தனே” என்னுந் திருவாசகத் திருப்பாட்டும், “பித்தாபிறைசூடி” என்னுஞ் சுந்தரமூர்த்தி நாயனார் திருப்பாட்டும் பிறவுமே அதற்குச் சான்றாம். முதலாழ்வார்களுள் எவரும் திருமாலை அங்ஙனம் 'பித்தன்' என்றுரைப்பக் கண்டிலம் சிவபிரானுக்குப் பித்தன் என்னும் பெயர் மிகப் பரவி வழங்கலானதுசுந்தரமூர்த்தி நாயனார் காலந்தொட்டே யாம். ஆகலான், அச் சொல்லைத் தாம் வணங்கிய திருமாலுக்கும் சைவசமய ஆசிரியர் போற் கூற விழைந்தே அவர்கட்குப் பின்னிருந்த இவ்வாழ்வார் அதனைத் தமது பாட்டில் இயைத்தாரென்பது இவ்வாராய்ச்சி வல்லார்க்கு நன்கு விளங்காநிற்கும். அது வல்லாமலும், இவ்வாழ்வார் திருநாவுக்கரசு நாயனார் தேவாரங்களையும் நன்கு பயின்று அவற்றைப்போற் பாட விழைந்தமை,

“வென்றிலேன் புலன்கள் ஐந்தும் வென்றவர் வளாகந் தன்னுட்

சென்றிலேன் ஆத லாலே

செந்நெறி யதற்குஞ் சேயேன்

நின்றுளே துளும்பு கின்றேன் நீசனேன் ஈச னேயோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/183&oldid=1588622" இலிருந்து மீள்விக்கப்பட்டது