உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 2 இன்றுளேன் நாளை யில்லேன்

என்செய்வான் தோன்றி னேனே”

175

என்னுந் திருநாவுக்கரசு நாயனார் திருநேரிசையோ டொப்ப இவ்வாழ்வார்,

“போதெல்லாம் போது கொண்டுன்

பொன்னடி புனைய மாட்டேன்

தீதிலா மொழிகள் கொண்டுன்

திருக்குணம் செப்ப மாட்டேன்

காதலால் நெஞ்சம் அன்பு

கலந்திலேன் அதுதன் னாலே

ஏதிலேன் அரங்கர்க் கல்லேன்

என்செய்வான் தோன்றி னேனே'

என்று பாடிய பாடலால் இனிதுவிளங்கும். இவ்வாழ்வார் சிவபிரானை யாண்டும் இகழ்ந்து பேசாமையானும், “புலையற மாகிநின்ற புத்தொடு சமணம் எல்லாங் கலையறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்ப ரோதாம்.

என்று இவர் புத்தர் சமணரைப் பழித்துப் பேசியவாறு போலச் சைவ சமயத்தவரைப் பழித்துப் பேசாமையானும், சைவசமயம் உயர்வும் சைவசமயாசிரியரது தெய்வத்தன்மையும் மிக்கு விளங்கிய காலத்தை ஒட்டிஇவ் வாழ்வார் இருந்த வராதல் வேண்டுமென்பது பெறப்படும். எனவே, கி.பி. எட்டாம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது ஒன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்த சுந்தரமூர்த்தி நாயனார்க்குப் பின்னே, அஃதாவது பத்தாம் நூற்றாண்டின் துவக்கத்தே தொண்டரடிப் பொடியாழ்வார் இருந்தமை தேற்றமாம். ஆகவே,திருவாசக காலத்திற்கும் தேவார காலத்திற்கும் பிற்பட்டவராகிய இவ் வாழ்வாரே திருவாசகத்திற் போந்த 'திருப்பள்ளியெழுச்சி’யைப் பார்த்துத் தாமும் திருவரகங்கப் பெருமாள்மேல்

வ்

ஒரு

திருப்பள்ளியெழுச்சி பாடினாரே யல்லாமல், இவரைப் பார்த்து மாணிக்கவாசகர் பாடினாரல்ல ரென்பது கடைப்பிடிக்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/184&oldid=1588623" இலிருந்து மீள்விக்கப்பட்டது