உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

  • மறைமலையம் - 23

இனித், திருமங்கை யாழ்வாருடைய செய்யுட்களும் பிற்காலத்துக் கோயிற்குறிப்புகள் சொற்கள் கதைகள் விரவப் பெற்றனவாயிருத்தலானும்,தேவார திருவாசகங்களின்

அமைப்பையே பெரிதொட்டிச் செய்யப்பட்டனவாயிருத்த லானும், அவற்றுள்ளுஞ் சுந்தரமூர்த்தி நாயனார் தம் திருப்பதிக இசைகளோடொப்ப அமைக்கப்பட்டன பலவாயிருத்தலானும், முதலாழ்வார் மூவர்போலாது திருமங்கை யாழ்வார்தம் பாக்கள் சிவபிரானைப் பலகாலும் இழித்துப் பாடுதலானும் இவர் தம் பாக்களும் இவரும் வைச சமயாசிரியர் எல்லார்க்கும் பின்னே, அஃதாவது சுந்தரமூர்த்தி நாயனாரது காலத்துக்கு ஒரு நூற்றாண்டிற்குப் பின்னே, வைணவ சமயம் சவை சமயத்திற்கும் முற்றும் மாறாய் விலகிக் கிளர்ச்சி பெற்ற கி.பி. பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியி லிருந்தமை தேற்றமாம். யாங்ஙனமெனிற் காட்டுதும்: முதலாழ்வார் பாடல்களில் வடநாட்டுத் திருமால் கோயில்களுள் எதுவுங் கூறப்படா திருக்கத், திருமங்கையாழ்வார் பாடல்களிலோ ‘பிரிதி’ ‘வதரி’ 'வதரியாச்சிரமம், 'சாளக்கிரமம்’ ‘நைமிசாரணியம்’ முதலான வடநாட்டுத் திருமால்கோயில்களும் பெரிதெடுத்துப் பாடப்பட்டிருக்கின்றன. தென்னாட்டுத் திருமால் கோயில்களும் இவ்வாழ்வார் பாடல்களிலும் சடகோப ஆழ்வார் பாடல்களிலும் மிகுதியாய்க் காணப்படுமாறு போல் ஏனையாழ்வார் தம் பாடல்களிற் காணப்படுகின்றில. இதனால், இவ்வாழ்வார் இருவர் காலத்திலும் வைணவ மதம் பெரிதுங் கிளர்ச்சி பெற்று நின்றமையும், திருமால் கோயில்கள் ஆங்காங்குப் பெருகி விட்டமையும் இனிது புலனாம். முதலாழ்வார் பாடல்களிற் குறிப்பிடப்பட்ட திருமால் கோயில்கள் 'திருவேங்கடம்' ‘திருக்கடிகை' 'திருவிண்ணகர்’ 'திருவெஃகா’ ‘திருக்கோவலூர்’ 'திருவரங்கம் திருத்தண்கால் திருக்கோட்டியூர் திருமாலிருஞ் சோலைமலை, திருத்தஞ்சை திருமல்லை திருக்குடந்தை திருப்பாடகம், அத்தியூர் திருவல்லிக்கேணி, திருநீர்மலை திருக்கச்சி, திருவேளுக்கை, திருவனந்தை, அட்டபுயகரம் முதலியவைகளே யாம். வ் விருபதுக்கு மேற்பட்ட திருமால்கோயில் வேறெதும் முதலாழ்வார் மூவர் பாடல்களிற் காணப் படுதலின்று. மற்றுத் திருமங்கையாழ்வார் பாடல் களிலோ இவ்விருபதில் பத்தொன்பதும் இவற்றிற்கு மேல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/185&oldid=1588624" இலிருந்து மீள்விக்கப்பட்டது