உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

அவர்

6

181

ன்

  • மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 2 ஆழ்வார் இருவரும பாடிய விண்ணகரம் கச்சியிலுள்ள ‘பரமேச்சுர விண்ணகரமே' யா மென்பதற்கு அவ்விருவரும் அதனை அதற்குஅருகிலுள்ள 'திருவெஃகா'வோடு உடன் சேர்த்து "வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும்” எனவும், விண்ணகரம வெஃகா விரிதிரைநீர் வேங்கடம்”7 எனவும் அருளிச்செய்தலே சான்றாம். அதுவேயு மன்றிப், பொய்கை யாழ்வார் தாம் பிறந்ததொண்டை நாட்டைவிட்டு வேறு நாடுகளுக்குச் சென்றிலரென்பது மேற்காட்டினமாகலானும், அவர் காலத்தில் அப் பெயர் கொண்ட திருப்பதிகள் பிற உளவாயிருப்பினும் அவை தம்மைஅவர் பாடியிரா ரென்பதற்கு, ஏனை நாட்டுத் திருப்பதிகளைப் பாடாமையே சான்றாமென்பது னிப், பேய்பூதம்என்னும் ஆழ்வார் இருவருமோ ஏனை நாடுகளிலுள்ள ஏனைத் திருமால்கோயில் கட்குஞ் சென்று அவை தம்மைப் பாடினமை மேலெடுத்துக் காட்டினமாகலின், அவ்விருவரானும் ஏனைப்பொய்கை யாரானும் பாடப்பெற்ற திருமால் திருப்பதிகள் இருபதைத் தவிர வேறுபல அம்மூவர் காலத்தில் இருந்திலவென்பது தேற்றமாம். மற்றுத், திருமங்கையாழ்வாரோ இவ் விருபதுக்குமேல் அறுபத்தாறு வேறு திருமால் திருப்பதிகளைப் பாடியிருக்கின் றாராகலின், வைணவ சமயம் பெரிதுங் கிளர்ச்சிபெற்றுத் திருமால் கோயில்கள் இந் நாவலந்தீவெங்கும் அமைக்கப்பட்ட கி.பி. ஒன்பது பத்தாம் நூற்றாண்டுகளில் இவ்வாழ்வாரும் இதே ஏதுவினாற் சடகோப ஆழ்வாரும் இருந்தமை இனிது துணியப்படுமென்க.

வ்

இனிப், பெரியாழ்வார் ஆண்டாள் நம்மாழ்வார் முதலியோர் இயற்றிய செய்யுட்களிற் கொச்சைத் தமிழ்ச் சொற்களும் புதிதுபுகுந்த பிறசொற்களும் வடசொற்களும் காணப்படும். அவ்வளவு திருமங்கையாழ்வார் பாக்களில் அவை காணப்படாவாயினும், 'மனிதப்பிறவி, 'வாநரம்’ “நரநாரணன் முதலான புதிது புகுந்த சொற்களும், இராமாயணத்திற் போந்த பரதன் ‘சத்துருக்கன், 'இலக்குமன், 'மைதிலி', 'கரன்’, ‘கவந்தன்’, விராதன்’, ‘தயரதன்’ முதலான பெயர்களும், 'தேநுகன் ‘பூதனை ன முதலான ஏனைப் பெயர்களுந் தடையின்றி விரவக்காண்டலின், இவர் அப்பெரியாழ்வார் முதலிய மூவர்க்கம் சிறிது முன்னே இருந்தாராதல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/190&oldid=1588631" இலிருந்து மீள்விக்கப்பட்டது