உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

66

மறைமலையம் - 23

வகையறு நுண்கேள்வி வாய்வார்கள் நாளும் புகைவிளக்கும் பூம்புனலும் ஏந்தித் - திசைதிசையின் வேதியர்கள் சென்றிறைஞ்சும் வேங்கடமே”

D

என அத் திருக்கோயிலில் வழிபாடு செய்வார் வழிபடுமுறை களை தாம் நேரே கண்டமைக்கு அறிகுறியாகச் 'செய்யும்' என்னும் நிகழ்கால் வினைச்சொற் பெய்துரைத்தலும், அங்ஙனமே பருமாள் ‘திருவேங்கடத்’தில் நின்ற திருக்கோலத் தோடும் ‘திருவிண்ணக’ரில் இருந்த திருக்கோலத்தோடும் 'திருவெஃகா’விற் கிடந்த திருக்கோலத்தோடும் 'திருக்கோவலூ’ரில் நடந்த திருக்கோலத்தோடும் எழுந்தருளுமாற்றினைத் தாம் நேரே கண்டு, “வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும் அஃகாத பூங்கிடங்கின் நீள்கோவற் பொன்னகரும் - நான்கிடத்தும் நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே

என்றாற் கெடுமாம் இடர்"

ஏனை

என்று அருளிச் செய்தலும் நுணுகி நோக்கவல்லார்க்குப் பொய்கையாழ்வார் தொண்டை நாட்டைவிட்டு நாடுகளுக்குச் சென்றிலரென்பது தெற்றென விளங்கா நிற்கும். ஆகவே, பேய் பூதம் என்னும் மற்றை ஆழ்வார் இருவரோடுங் கூடிப் பொய்கையாழ்வார் திருமால் திருப்பதிகடோறுஞ் சென்றாரெனகக் கூறும் க வைணவருரை பொருந்தாமை கண்டுகொள்க. இவ்வாற்றாற், பொய்கை யாழ்வார் பாடிய ‘விண்ணகர்' என்பது அவர் பிறந்தருளிய 'திருவெஃகாவிற்கு அணித்தாய்க் கச்சியிலுள்ள பரமேச்சுர விண்ணகரமே ‘யல்லாமல், சோழநாட்டின்கண் திருக்குடந்தைக்கு அருகிலுள்ள திருவிண்ணகரும் அன்று, 'வைகுந்த விண்ணகரம், 'அரிமேய விண்ணகரம்’, காழிச் சீராம விண்ணகரம்’ நந்திபுர விண்ணகரம் முதலியனவும் அன்று என்னை? சோழநாட்டின்கண் உள்ள இவ்வைந்து விண்ணகரங்களுள் ‘திருவிண்ணகர்’ பிற்காலத்து ஆழ்வார்களான திருமங்கையாழ்வார் சடகோப ஆழ்வார் என்னும் இருவரானும், ஏனை நான்கும் திருமங்கையாழ்வார் ஒருவரானுமேயன்றி ஏனை யாழ்வார்களாற் பாடப்படாமையின் வ்வைந்தும் முதலாழ்வார் மூவர் காலத்திற்கும் பிற்பட் டெழுந்தனவேயாதல் பெறப்படும். பொய்கை பேய் என்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/189&oldid=1588629" இலிருந்து மீள்விக்கப்பட்டது