உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

2

179

காலத் தமிழ்மக்கள் இவ்விரண்டு திருவுருவினையும ஒரே கோயிலின்கண் ஒருங்குவைத்து வழிபாடு செய்து போந்தமை நன்குவிளங்கும். ஆகவே, திருமாலுக்கென்று தனிக்கோயில்கள் பெருகலானமை முதலாழ்வார் மூவர் காலத்திற்குப் பின்னரேயா மென்பது திண்ணமென்க.

அற்றேற்,பொய்கை பேய்பூதம் என்னும் ஆழ்வார் மூவரும் ஒரே காலத்தினராகலான் அம்மூவரும் ஒன்று கூடியே திருமால் கோயில்ககோடறுஞ் சென்றனர் என்று தொன்றுதொட்டு வைணவர்கள் வழங்கிவராநிற்ப, அம்மூவருட் பொய்கையார் சோழநாட்டின் கண்ணதான 'திருவரங்கம்' ஒன்றை மட்டும் பாடித் தொண்டைநாடு அல்லாத மற்றை நாடுகளிலுள்ள திருப்பதிகளைப் பாடாமையும், தொண்டை நாட்டுள்ளுந் ‘திருவெஃகா’ ‘திருவிண்ணகர்’ ‘திருக்கோவலூர், 'திருவேங்கடம்' என்னும் நான்கைத்தவிர ஏனையவற்றை அவர் பாடாமையும், ஏனையிருவர் ஏனை நாடுகளிலுமுள்ள திருப்பதிகளைப் பாடுதலும் என்னையெனிற், கூறுதும் பொய்கையாழ்வார் கச்சித் திருவெஃகா என்னுந் திருப்பதியிற் பிறந்தருளினவர். அவர் தொண்டை நாட்டிலுள்ள மேற்கூறிய நான்குதிருக் கோயில்கட்கும் நேரே சென்று அங்குள் இறைவனைப் பாடினாரென்பதற்கு வேண்டும் அடையாளங்கள் அவர் அருளியஅச் செய்யுட்களிலேயே இருக்கின்றன. ஆனாற் சோழநாட்டின் கண்ணதாகிய 'திருவரங்கத்'தை அவர் குறிப்பிடுகையில் அத் திருப்பதிக்குத் தாம் செல்லாமல் தாம் தொண்டைநாட்டில் இருந்தபடியாகவே அதனைப் பாடியருளினார் என்பதற்குரிய அடையாளம் அவரது செய்யுளிற் காணப்படுகின்றது. யாங்ஙனமெனின்,

66

‘அன்று,

கருவரங்கத் துட்கிடந்து கைதொழுதேன் கண்டேன் திருவரங்க மேயான் திசை.”

என்று அவர் அத் திருப்பதியைக் குறிப்பிட்டுத் தாம் திருவரங்கப் பெருமாள் எழுந்தருளிய திசையைக் கண்டதாகப் புகன்றனரே யன்றித், தாம் அங்குச் சென்று அப்பெருமாளை நேரே கண்டு தொழுததாக உரைத்திலாமை யான் என்பது. மற்று அவர் 'திருவேங்கடத்’தைப் பாடியவழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/188&oldid=1588628" இலிருந்து மீள்விக்கப்பட்டது