உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

மறைமலையம் - 23

திருக்கோயிற் பதிகள் இருநூற்று எழுத்து நான்கு ஆகவே, மாணிக்கவாசகப் பெருமான் வயங்கிய கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலேயே இத் தமிழ்நாடெங்கணும் சிவபிரான் திருக்கோயில்களே மிகுந்திருந்தமையும், கி.பி. ஆறு, ஏழு, எட்டாம் நூற்றாண்டில் திகழ்ந்தஅப்பர் சம்பந்தர் சுந்தரர் என்னும் ஆசிரியர் காலங்களில் இன்னும் மிகுதியாய் அவை பெருகியிருந்தமையும் நன்கு துணியப்படும். சுந்தரமூர்த்தி நாயனார் காலம் வரையில், திருமாலும் சிவபிரானோடு சேர்த்துச் சைவர்களாலேயே வழிபாடு செய்யப்பட்டு வந்தமையின், திருமாலுக்கென்று வேறு தனிக்கோயில்கள் கட்டப்படாமற், சிவபிரான் திருக்கோயில் களினுள்ளேயே திருமாலின் திருவுருவமும் வைத்து வழிபாடு செய்யப்பட்டு வந்தது. பின்னர்ச் சிவபிரானை விட்டுத் திருமாலை மட்டும் வழிபடுவார் தொகை பெருகப் பெருகத், திருமாலுக் கென்றே தனிக்கோயில்களும் அமைக்கப்பட்டு அவற்றின் தொகையும் பெருகலாயிற்று. பழைய காலத்தில் அமைக்கப் பட்ட திருமால் கோயில்களில் திருமாலின் திருவுருவோடு சிவபிரான் திருவுருவும் ஒருங்கு வைத்து வழிபாடு ஆற்றப் பட்டமைக்குத், தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவுஞ் சக்கரமும்

பட்ட

66

சூழ்அரவும் பொன்நாணுந் தோன்றுமால் - சூழுந்

திரண்டருவி பாயுந் திருமலைமேல் எந்தைக்கு இரண்டுருவும் ஒன்றாய், இசைந்து.

என்று பேயாழ்வார் அருளிச் செய்திருத்தலே சான்றாதல் காண்க. இதுகொண்டு பேயாழ்வார் காலத்தில் திருவேங்கடமலையின் மேல் சிவபிரானுந் திருமாலும் ஒருங்கு வைத்து வணங்கப் மைஇனிது புலனாகின்ற தன்றோ? திருவரங்கத்திற் பிள்ளையார் திருவுருவம் இருத்தலும், வ்வாறே 'திருக்கோட்டியூர்’ ‘திருக்குறுங்குடி' முதலிய பழைய திருமால் கோயில்களினுட் சிவபிரான் கோயிலும், ஏனைப் பழையதிருமால் கோயில்களில் வில்வ மரங்களும் வில்வ இலைகளைத் தூவி இறைவனை வழிபடுதலும் வேறு சில சிவ அடையாளங்களுங் காணப்படு தலானும், இங்ஙனமே 'தில்லையம்பலம், 'திருவண்ணாமலை' முதலான சிவபிரான் றிருக்கோயில்களிலும் திருமால் கோயில்கள் உள்ளடங்கி யிருத்தலானும் பண்டைக்

க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/187&oldid=1588626" இலிருந்து மீள்விக்கப்பட்டது