உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183

18. திருமங்கையாழ்வார் காலம்

னி, முதலாழ்வார் மூவர் தம் பாடல்களிற் கண்ணன்வாமநன் வராகன் நரசிங்கன் முதலான திருமால் வடிவினர் மேற்பாடப்பட்டனவே மிகப் L பலவாயும், இராமன்மேற் பாடப்பட்டன மிக சிலவாயும் இருப்பத் திருமங்கையாழ்வார் பாடல்களிலோ இராமன்மேற் பாடப் பட்டனவும் இராமன் கதை கூறுவனவும் சாலப்பலவா யிருக்கின்றன. அதனால், இராமாயண கதை இத் தென்றமிழ் நாட்டில் மிக்குப் பரவிய காலத்தேதான் இவ்வாழ்வார் இருந்தமை தேற்றமாம். இராமாயண கதை கி.பி.முதல் நூற்றாண்டுக்கு முற்பட்ட பழந்தமிழ்ப் பாடல்களில் ஒரு சிறிதுங் காணப்படாமையும், கி.பி. முதல் நூற்றாண்டின் துவக்கத்தி லிருந்தே அது தமிழ்நாட்டிலுள்ளார்க்குச் சிறிது சிறிதாகத் தெரிய லானமையும் மேலே விளக்கிப் போந்தாம். தொன்று தொட்டுத் தமிழ்நாட்டிலும் வடநாட்டிலும் மிகவும் பரவியிருந்தது சைவசமயக் கொள்கையேயாம். வடநாட்டில் டையே தோன்றிய பௌத்த சமண மதங்கள் தொடக்கத்திற் சைவசமயத்திற்கு மாறாக நில்லாவிடினும் நாளேற நாளேறத் தாம் தனித்து நிற்கும் ஆற்றல்பெற்ற வளவானே அதனொடு பெரிதும் மாறுபட்டு, அதனைத் தழுவினார்க்குப் பெரிதுந் தீங்கிழைப்பவாயின. அக்காலங்களில் வைணவ வடநாட்டிற்றனி நின்று பரவி நில்லாமையாற், பாரத இராமாயண கதைகள் பௌத்தசமண மதங்களுக்கு எதிரே தலைதூக்கி நின்று அங்கும் பரவினவல்ல. அஞ்ஞான்று அரசுவீற்றிருந்த பௌத்த சமணமதங்களோடு எதிர் நிற்கலாற்றாத ஆரியப்பார்ப்பனர் வடநாடு துறந்து தமிழ்நாடு புகுந்து இங்கு நிற்க நிலைக்களம் பெற்ற பின்னரே தான் தாம் தம்முடன் கொணர்ந்த பாரத இராமாயண கதைகளைத் தமக்கு

மதம்

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/192&oldid=1588633" இலிருந்து மீள்விக்கப்பட்டது