உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

  • மறைமலையம் - 23

உயர்வுண்டாம் வகையிலும், தமிழ் நாட்டவர் மனங்களைத் தம்மாட்டு ஈர்க்கும் வகையிலும் வரவரப் பெருக்கியெழுத லாயினர். மாபாரதமானது முதலில் எண்ணாயிரத்து எண்ணூறு சுலோகங்கள் மட்டும் உடையதாயிருந்தென்பதும், அதன்பிற் சில நூற்றாண்டுகள் கழித்து அஃது இருபத்து நாலாயிரஞ் சுலோகங்கள் உடையதாக முன்னையிலும் மும்முடங்கு பெருக்கி எழுதப்பட்ட தென்பதும் அதன்பின் சில நூற்றாண்டுகள் செல்ல நூறாயிரஞ் சுலோகங்களுடையதாக முதலிலிருந்ததற்குப் பன்னிரண்டு மடங்கு பெருக்கி எழுதப் பட்டதென்பதும் அதன் றொடக்கத்திலுள்ள ‘ஆதிபருவத் திலேயே தெளிவாகச் சொல்லப்பட்டிருக் கின்றன.' முதலிற் சுருக்கமாயிருந்த பாரத கதை கிறித்து பிறப்பதற்குப் பத்து நூற்றாண்டுகளுக்கு முன்னரே இருந்த தொன்றாகும்; அதன்பின் 8800 சுலோகங்களுடையதாகச் செய்யப்பட்டது. கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலும், பின்னர் 20,000 சுலோகங் களுடையதாகச் செய்யப்பட்டது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலும் பின்னும் நூறாயிரஞ் சுலோகங்க ளுடை ஆக்கப்பட்டது கிறித்துவுக்குப் பின் நான்காம் நூற்றாண் டிலுமாக வரவரப் பெருக்கி யெழுதப்பட்டன வாகுமென வடமொழி வல்ல ஆசிரியர் மாக்டனல் உயர்ந்த பல சான்றுகள்

.

யதாக

காட் டி நன்கு விளக்கியிருக்கின்றார்.2 விஷ்ணுவின்

பல்பிறப்புக்களையும், கண்ணன்றன் ஆண்மைச் செயல்களையும் விரித்துக்கூறும் 'ஹரிவம்சம்' என்னும் நூல் பதினாயிரஞ் சுலோகங்கள் உடையதாகச் செய்து பாரதத்தின் இறுதியிற் சேர்க்கப்பட்டதுங் கி.பி.நான்காம் நூற்றாண்டிலேயே மென்பதூஉம் அவராற் காட்டப்பட்டது. இதற்கு முற்பட்ட பாரதக்கதையிற் கண்ணனது குழவிக் காலத்து ஆண்மைச் செயல்களும் பிறவும் ஒரு சிறிதுங் கூறப்படாமையுங் கருத்திற் பதிக்கற்பாற்று. எனவே கண்ணன் திருமாலின் பிறப்பாகக் கொள்ளப்பட்டதும், அவனுக்கு அரிய பெரியஆண்மைச் செயல்களை ஏற்றிக் கூறியதும் எல்லாம் கி.மு. மூன்றா நூற்றாண்டிலிருந்து பார்ப்பனர் களாற் புனைந்து சேர்க்கப் பட்டனவாகும். இவ்வாறு தமது உயர்வினை நிறுத்தல் வேண்டியும் ஏனை மக்கள் எல்லாரையுந் தங்கீழ் அடக்கி வைத்தல் வேண்டியுமே பார்ப்பனப் புலவர்கள் காலங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/193&oldid=1588635" இலிருந்து மீள்விக்கப்பட்டது