உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185

  • மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 2 கடோறும் பாரதக்கதையைப் பெருக்கி யெழுதிவரலாயினர். இவ்வுண்மையும் நன்கெடுத்துக் காட்டப்பட்டது.3

மேற்காட்டிய

3

ஆங்கில

ஆசிரியரால்

இங்ஙனமே, வான்மீகிமுனிவர் இயற்றியதாகச் சொல்லப் படும் இராமாயண கதையும் முன்னாள் முதல் இந்நாள்வரையும் இடையிடையே பார்ப்பனர்களாற் பெருக்கி எழுதப்பட்டு வந்ததொன்றாகும் இவ்வாறு பற்பல காலங்களிலிருந்த பற்பலர் தாம்தாம் வேண்டியவைகளை எழுதியெழுதி இடையிடையே சேர்த்துவந்தமையால் இதன்கட் கூறப்படுஞ் செய்திகள் ஒன்றோடொன்று பெரிதும் மாறுபட்டுக் கிடக்கின்றன. அவற்றுட் சில ஈண்டெடுத்துக் காட்டுதும்; விரிவஞ்சி அம் மாறுபாடுகள் முற்றும் எடுத்துக்காட்டிலம். கிட்கிந்தா காண்டத்திற் சுக்கீரிவன் முதலில் தனக்கு இராக்கதர்களின் இருப்பிடமும் அவர்களின் வலிமை குடும்பம் முதலியவைகளைப் பற்றிய குறிப்புஞ் சிறிதுந் தெரியாவென்று கூறினமை நுவலப் பட்டிருக்கின்றது; ஆனால் அதன் பிற்பகுதியிலோ இந் நிலவுலகத்திலுள்ள இடங்களைப் பற்றிய வரலாறும், இலங்கை

L

இராவணனுக்கு உரியதாதலும் இவன் தான்விடுத்த

தூதுவர்களுக்கு விரிவாக அறிவித்தமை தெரித்துரைக்கப் பட்டிருக்கின்றது. இதுகொண்டு முற்பகுதியை யெழுதியவர் தென்னாட்டுக்கு வராமல் வடக்கின்கண்ணே இருந்த வராதலும் பிற்பகுதியை யெழுதிச் சேர்த்தவர் இத்தென்னாட்டின் கண் வந்து குடியேறி இவ்விடங்களை நன்குணர்ந்தவராதலும் தாமே நன்குவிளங்கும். வான்மீகி இராமாயணத்திற்கு இருநூறாண்டு முற்பட்டதாகிய 'தசரத ஜாதகத்'திலும் தன் றந்தையின் கட்டளையால் அரசு துறந்துசென்ற இராமன் இமயமலைச் சாரலிற் சென்று வைகிப் பன்னீரி யாண்டு கழித்து வந்து தனதரசைக் கைக்கொண்டான் என்னும் அவ்வளவே சொல்லப் பட்டிருக்கின்றதல்லாமல், அவன் தென்னாடு நோக்கின் சன்றானெனவாதல், தன் மனைவியைக் கவர்ந்துசென்ற இராவணனொடு பொருது அவனை மடித்து அவளை மீட்டுவந்தானெனவாதல் ஒரு சிறிதுங் கூறப்படாமையால், இவையெல்லாந் தென்னாடு போந்த பார்ப்பனராற் பின்னர் எழுதிச் சேர்க்கப்பட்டனவா மென்பதை மேலும் எடுத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/194&oldid=1588636" இலிருந்து மீள்விக்கப்பட்டது