உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

மறைமலையம் - 23

காட்டினாம். இருக்கு வேதத்தில் மழையைப் பெய்விப்பவனாக வணங்கப்படும் இந்திரனாகிய இராமனுக்கும், அம்மழை வளத்தைப் பெறூஉம் உழவுசாலாகிய சீதைக்கும் உள்ள தொடர்பினையே பின்னர் ஒரு கதையாகப் புனைந்து கட்டினர் என்பதனையும் மேலே விளக்கினாம். மற்று, இக் கதையை அவ் விருக்குவேத நிகழ்ச்சியோடு தொடர்புடைய புனைந்துரை நாடக வழக்காகக் கொள்ளாது, இராமன்' சீதை' எனப் பெயரிய அரசனும் அரசியும் உண்மையிலிருந்தவரே யாவரெனக் காள்ளினும் அவ்விருவருந் தென்னாடு போந்தமைக்கும், இராவணன் என்போனால் துன்புற்று மீண்டமைக்கும்மிகப் பழைய வடநூல் தமிழ் நூல்களிற் றினையளவு சான்றுதானும் இல்லையென்க.

இன்னும், இப்போதுள்ள வான்மீகி இராமாயணத்தில் 'மந்தரை' என்பாள் ‘கைகேயி’க்குச் சொல்லுமிடத்தில் 'இராமனுக்கு மனைவிமார் பலர் இருந்தமையினைக்’ குறிப்பிட்டிருக்கின்றாள். ஆனால், 'இரகுவம்சம்’ என்னும் நூலெழுதிய காளிதாசரோ அவனுக்குச் சீதையை மட்டுமே மனைவியாக உரைநிகழ்த்துகின்றார். இவ்வாற்றால், தசரதன் இராமன் பரதன் என்பார்க்கு மனைவிமார் பலருளரெனக் கிளந்த செய்யுட்கள் பிறரால் வரைந்து சேர்க்கப்பட்டமை புலனாம்.

இன்னும்,

அகலிகையென்பாள் இந்திரனொடு மருவினமை பற்றிக் கௌதமராற் கல்லாக உருமாறிக் கிடக்கும்படி சினந்துரைக்கப்பட்டாள் என்றாதல், பின்னர் இராமனது அடித் துகள் பட்டவளவானே தனது பழைய வுருவி வினைப்பெற்று நின்றாள் என்றாதல் ஏதும் வான்மீகி

ராமாயணம் பகரவில்லை. அவள் இழைத்த அக்

குற்றத்திற்காகக் கௌதமர் அவளைநோக்கி: "இவ்வாசிரமத் துள்ளார் எவர் கண்ணிலும் படாமல், காற்றையன்றி வேறேது உணவும் எடாமல், திருநீற்றிற் கிடந்தபடியாய், நீ செய்த குற்றத்தை நினைந்து வருந்தித் தவம்புரியக் கடவை!” என்று சினந்துரைத்தன ரெனவும், அவ்வுரைப் படியே அவள் திருநீற்றிற்கிடந்து தவமியற்றி, இராமன் தனது ஆசிரமத்திற்கு வந்த ஞான்று அத் தவம் முடிவு பெற்றமையின், வந்த அவனை

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/195&oldid=1588638" இலிருந்து மீள்விக்கப்பட்டது