உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

  • மறைமலையம் - 23

அசைக்கமுயன்றும் அஃதவர்களாற் சிறிதும் இயலாமையின் அவர்கள் அஞ்சியோடிப்போக, இறுதியில் அவனைக் காண்பான்புக்க இந்திரனுக்குமுன் அவ்வியக்கன் கட்புலனா காமல் மறைந்துவிட, அதனாற்பெரிது வருந்திச் சிறுமையுற்று நின்றஅவ் விந்திரனுக்குமுன் வானத்தின்கண் உமைப்பிராட்டி யார் தோன்றி அவ்விறைவனியல்பு எல்லாத் தேவர்கட்கும் மேற்பட்டதாதலை அறிவுறுத்தி மறைந்தமையும் தெளிவாகச் சொல்லப்பட்டிருத்தல் காண்க. முப்புரங்களை அழித்த வெற்றி எல்லாம்வல்ல சிவபிரானுக்கே உரித்தாதல் எல்லா நூல்கட்கும் ஒப்ப முடிந்த தொன்றாகவும், இயக்கன்வடிவிற் புலப்பட்டுத் தோன்றி மறைந்த இறைவன்இயல்பை அறிவுறுத்துதற்கு அருள்கனிந்து வந்தஇறைவி உமைப்பிராட்டியாராகலின் அங்ஙனம் இயக்கனாய் வந்தோன் அவள் காதற் கொழுநனாகிய சிவபிரானேயாதல் எளிதிற்பெறப்படா ா நிற்கவும், இவ்வுண்மையை யுள்ளவாறே எடுத்துரைக்கும் நடுவுநிலைமை யின்றிக் கேநோபநிடதத்திற்கு இற்றைக்கு ஐந்நூறு ஆண்டுகட்குமுன் உரையெழுதின மாதவசாரியாரும், அறுநூறு ஆண்டுகட்கு முன் உரையெழுதின இராமாநுஜா சாரியரும் ஆகிய வைணவப் புலவர்கள் அங்ஙனம் இயக்க வடிவத்தில் வந்தோன் நாராயணனே எனப் பழைய நூற்கருத்துகட்கெல்லாம் முற்றும் மாறாக உரையுரைத்தார்; அங்ஙனம் இயக்கவடிவிற் றோன்றினோன் நாராயணனே யாயின், தேவர்களெல்லாரும் அவனை முதல்வனாய்க் கொண்டன்றோ முப்புரங்களை அழித்திருத்தல்வேண்டும். பழைய வடநூல்களுள் எதுவும் அவ்வாறு உரைப்பக் காணாமையானும், நாராயணனே இயக்கவடிவிற் போந்து மறைந்தது உண்மையாயின் அவனை யறிவுறுத்துதற்கு அவன்றன் காதற்கிழத்தியாகிய திருமகளன்றோ வரற்பாலள், மற்று அவள் அங்ஙனம் வரக்காணாமையானும் அவ் வியக்கவடிவிற் போந்து தேவர்களின் யடக்கினோன் சிவபிரானேயாதல் ஒருதலை.

செருக்கை

இதனோடொப்பவே, மாபாரதத்திற் கண்ணன் உதிட்டிரனுக்குச் சிவபிரானது அறிதற்கரிய இறைமைத் தன்மைகளை விரித்துரைக்கும் மற்றொரு பகுதியும் கேநோபநிடத்'திற்கு போந்த இயக்கன் சிவபிரானேயாதலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/245&oldid=1588701" இலிருந்து மீள்விக்கப்பட்டது