உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 2

235

சென்றே அவர்கால் அதனைப் பெற்றிருக்கலா மன்றோ? அத்துணைதான் ஏன்? சிவபிரானைத் தோற்றோடச் செய்ய வல்லனாயிற் கண்ணன்தானே அப்பாசுபதத்திலும் மேம்பட்ட

தாரு

படையினை

அருச்சுனனுக்கு

வழங்கி

பல

யிருக்கலாமன்றோ? சிவபிரான் அமர்ந்திருக்கும் அறிவொளி வடிவினதான திருக்கைலாயத்தை இப் பருவுடம்புகொண்டு சேறல் இயலா தென்பதனை நன்குணர்ந்தன்றோ கண்ணனும் அருச்சுனனும் நுண்ணுடம்பு கொண்டு அங்கே சென்றனர் ஆதலாற், சிவபிரான் வாணன் கோட்டையில் அத்துணை யெளியராக நின்று காத்தனரென்பதூஉம்,அவரைக் கண்ணன் தோற்றோடச் செய்தனவென்பதூஉம் பின்வந்தோர் புனைந்த முழுப்பொய் யாதல் நன்குவிளங்கும். கண்ணனே இடங்களிற் சிவபிரான்றன் முழுமுதற்றன்மைகளை விரித்தோதிமையும், அவன் அப் பெருமானைக் காண்டற்குப் பெருந்தவம் புரிந்தமையும் பலகாலும் எடுத்துரைக்கும் மாபாரதப் போக்குக்கு இக் கதை முற்றும் முரணாய் இருத்தலின் இது முழுப்புரட்டாதலும், பேயாழ்வார் இக் கதையினைக் கூறக் காணாமையின் இஃதவர் காலத்தில் இல்லாமல் அவர்க்குப் பின்வந்த திருமங்கையாழ்வார் திருமழிசையாழ்வார் காலம்முதற் கட்டி வழங்கலானமையும் திண்ணமாய் விளங்குமென்க.

அற்றேல் அஃதாக, மாபாரதத்திற் சிவபிரான்றன் முழுமுதற் றன்மைகளை விரிக்குங் கதைகள் மட்டும் மிகப் பழையனவாதல் எற்றாற் பெறுதுமெனின், அதுவும் ஒரு சிறிது காட்டுதும்: மாபாரதத்திற்கு முற்பட்டதும் உபநிடதங்களில் மிகப் பழையதுமான கேநோபநிடத மானது. முப்புரங்கள் அழித்தபின்னர் அவற்றை அழித்த வெற்றி தத்தமக்கே உரித்தாகுமெனத் தேவர்கள் ஒவ்வொருவருந் தாந்தாமே நினைந்து இறுமாந்தமையும், அவர்கள் அவ்வாறு பிழைபட நினைந்து அடைந்த இறுமாப்பினை யொழித்துஅவர்கட்கு நல்லறிவு தெருட்டுவான் கருதிச் சிவபிரானே அத்தேவர்களால் முன் அறியப்படாத ஓர் இயக்கவடிவந் தாங்கி அவர்களெதிரிற் றோன்றி அவர்கள் முன்னே ஒரு துரும்பைக் கிள்ளிவிட, அவனை இன்னனென்று அறிவான் புகுந்த தேவர் ஒவ்வொருவரும் அவன் கட்டளையிட்டவாறே அத் துரும்பை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/244&oldid=1588700" இலிருந்து மீள்விக்கப்பட்டது