உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

மறைமலையம் - 23

களிலெல்லாம் அவனே மிகச்சிறந்தோன்; இம் மூன்றுலங் களினும் அவனையொப்பார் எவரும் இன்மையின்,அப் பெரிய தெய்வத்தின்முன் ஏதும் எதிர் நிற்கவல்லதன்று” என நெடுகச் சொல்லிக்கொண்டே சென்று, சிவபிரானுக்கு மாறாகச் செய்த தக்கன் வேள்வியிற் பிருகுவின் தாடியைப் பறித்தும், பகனுடய கண்களைக் குத்தியும், பூஷனுடைய பற்களைத் தகர்த்தும், மற்றத் தேவர்களையும் இவ்வாறே ஒறுத்தும்,பின்னர் அவரெல்லாம் நடுங்கி வேண்ட அவர்கட்கு அருள்செய்தும் சிவபிரான் தனது முழுமுதற்றன்மை தெளிவித்த வரலாற்றை அவன் மொழிந்தமை குறிக்கப்பட்டிருக்கின்றது. இன்னும் இவ்வாறே சிவபிரான்றன் இறைமைத்தன்மைகளை யுரைக்கும் L மாபாரதப் ஈண்டெடுத்துக் காட்டலுறின் இது மிக விரியும்.

பகுதிகளையெல்லாம்

இங்ஙனமாக மாபாரதம் எங்கும் சிவபிரான் ஒருவனே முழுதற் கடவுளாதலும்,ஏனை நான்முகன் திருமால் முதலிய தேவர்களுங் கண்ணனும் அப் பெருமானை வணங்கி வழிபட்டுப் பல நலங்களைப் பெறுவாராதலுந் தெளித் துரைக்கப்பட்டமையினை நடுநின்று ஆராய்ந்து கண்டலாசன் என்னும் ஆங்கில ஆசிரியர் திகாசங்கள் இயற்றப்பட்ட பழைய காலத்தில் விஷ்ணுவின் வணக்கம் இவ்விந்தியநாட்டில் எங்கும் இருந்ததிலையென்றும், அக்காலத்தில் சிவபிரான் வணக்கமே இந்நாடெங்கும் நிரம்பப் பரவியிருந்ததென்றும் அரியபெரிய மேற்கோள்கள் பற்பல காட்டி விரித்தெழுதி யிருக்கின்றார்." இவ்வாறு விஷ்ணு முதலிய எல்லாத் தேவர்களும் சிவபிரான்முன் எதிர் நிற்கலாற்றாதவர்களாய் அவனே முழுமுதற் கடவுளாதல் உணர்ந்து அவனை வழிபட்டுப் பெறற்கரிய பேறுகளெல்லாம் பெற்றிருக்க, விஷ்ணுவினது ஒரு மிகச்சிறிய கூறாகச் சொல்லப்படுங் கண்ணன்,2 வாணனுக்காகப் பரிந்துவந்து ஏற்ற 'சிவபிரானைத் தோற்றோடச் செய்தன னன்னுங் கதை முழுப்பொய்யாய்ப் பின்வந்த வைணவராற் புனைந்து கட்டிப் பாரதத்தின்கண் நுழைக்கப்பட்ட தொன்றாதல் தெற்றெனப் புலனாகின்றதன்றோ? சிவபிரான் அத்துணை எளியவராய் வாணனது கோட்டையைக் காத்து நின்றனராயின், கண்ணனும் அருச்சுனனும் பாசுபதம் வேண்டித் திருக்கையாலஞ் சல்ல வேண்டுவதென்னை? வாணனது கோட்டையிற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/243&oldid=1588698" இலிருந்து மீள்விக்கப்பட்டது