உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 2

233

அம்மையிடத்து எட்டுவரங்களையும் பெற்றனனெனவுஞ் சொல்லப்பட்டமை காண்க. (978-1034)

சாந்தி பருவத்திற் பரசுராமன் கந்தமாதன மலைமேற் சிவபிரானை வழிபட்டுஅவர்பால் மழுப்படைபெற்றுச் சிறந்தமைசொல்லப் பட்டிருக்கின்றது. (1748).

சிவபிரானை

சௌப்திக பருவத்திற் சிவபிரான் பரசுராமனை நோக்கிக் கூறுகின்றுழிக், கண்ணன் வழிபட்டமை நுவலப்பட்டிருக்கின்றது (312)

கர்ணபருவத்தில் (33 - 35 ஆம் இயல்), முப்புரங்களில் உள்ள அசுரர்களாற் பெரிதும் இடுக்கண்உற்ற தேவர்கள் நான்முகனைத் தலைவனாய்க்கொண்டு சென்று, சிவபெருமான் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி அவர் தம் இறைமைத் தன்மைகளை பலவாறு பாடி வழுத்தித் தங்குறையைத் தீர்த்தருளு மாறு வேண்ட, அவரும் அதற்கிசைந்து அவ்வசுரர்களின் பட்டினங்களைப் பொடி படுத்தினமை புலப்பட்டிருக்கின்றது. அவர் அங்ஙனம் அம் முப்புரங்கண்மேற் சென்ற காலத்துத், தேவர்கள் தமத அறியாமையால் தாமும் அவர்க்கு உதவிசெய்யக் கூடுமென்று கருதி அவர்க்குப் பலபோர்க்கருவி களாய் அமைந்துழி, விஷ்ணுவும் சோமனும் அக்நியும் என்பார் அவர் ஏந்திய வில்லின் நாணுங் கணையுமாய் அமர்ந்தனராகச் சொல்லப்பட்டிருக்கின்றனர்.

ன்னும், வனபர்வந் தீர்த்த யாத்திரைச் சருக்கத்திற் கலிங்கதேயத்திலோடும் வைதரணி யாற்றங்கரையிலுள்ள திரிபிஷ்டவத்திற் சிவபிரான் வணங்கப்படுதலும்,

ராமோபாக்கியானத்தில் தக்கணத்தின் மேற்கரையிலுள்ள கோகர்ணத்திற் பிரமன் முதலான எல்லாத் தேவர்களும் சிவபெருமானை வழிபட்டமையுங் கூறப்பட்டிருக்கின்றன.

இன்னும், அநுசாசனபருவத்தில் உதிட்டிரன், கண்ணனை நோக்கித் தனக்குச் சிவபிரான்றன் முழுமுதற் றன்மைகளை எடுத்துரைக்குமாறு வேண்ட, அவனும் அதற்கு சை சந்து, “சிவபிரானே நிலையியற்பொருள் இயங்கியற்பொருள் எல்லாவற்றையும் படைத்திருக்கின்றான்; சிவபிரானுக்கு மேற்பட்டது ஏதுமேயில்லை; இம் மூன்றுலங்

அரசனே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/242&oldid=1588697" இலிருந்து மீள்விக்கப்பட்டது