உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மன்பதைக் கதைகள்

69

திருவதிகை சேந்தமங்கல மன்னன் ஆட்சியின் கீழேயே இருந்தது. மானேந்தி அதன் உரிமை இளவரசன் என்றறிந்த திருவதிகைப் பெருமக்கள் அவனுக்குப் படையுதவி தந்து அரசனாக்குவதாக உறுதி கூறினர். ஆனால் மார்கழியைத் தேடிவந்த பின்தான் வாழ்வில் தனக்கு ஈடுபாடு ஏற்படும் என்று கூறிவிட்டு, அவன் மீண்டும் நாடோடியாகப் புறப்பட்டான்.

இரண்டாண்டுகள் பல நாடுகளும் காடுகளும் சுற்றியபின்பு மானேந்தி மார்கழி அலைந்து திரிந்த பாலைவனத்தை அணுகினான்.

பாலைவனத்துக்கு வரும்போதே மார்கழி கருவுற்றிருந்தாள். பாலைவனத்தில் அவளுக்கு ஆணும் பெண்ணுமாக இரட்டைக் குழந்தைகள் இருவர் பிறந்தனர். பாலைநீரூற்றும் பேரீத்தம் பழங்களும் ஒட்டகைப் பாலும் உண்டு. அருமுயற்சியுடன் அவள் பிள்ளைகளை வளர்த்தாள். பாலையில் பிறந்ததனால் அவர்களுக்குச் செம்பாலை என்றும் பொலம்பாலை என்றும் பெயரிட்டாள்.

மானேந்தி பாலைவனத்தில் அலைந்து களைப்புடன் ஒரு கருவேல மரத்தடியில் சாய்ந்து கண்ணயர்ந்திருந்தான். அச்சமயம் குழந்தைகளின் குரல்கேட்டு அவன் திடுக்கிட்டெழுந்தான். செந்நாய் ஒன்று சிறுமியைச் சுற்றி வளைக்க முயன்று கொண்டிருந்தது. அச்சிறுமியின் வயதே உடைய சிறுவன் கவண் கல்லைவைத்து அதன் மீது குறிபார்த்துக் கொண்டிருந்தான். மானேந்தி தன் வாளால் செந்நாயை ஒரு நொடியில் வெட்டி வீழ்த்திவிட்டுக் குழந்தையை எடுத்து அணைத்துக் கொண்டான். அதற்குள் சிறுவனும் வந்து 'மாமா, மாமா' என்று காலைச் சுற்றிக்கொண்டான்.

'நீங்கள் யார், குழந்தைகளே! இந்த ஆளற்ற பாலைக்கு எப்படி வந்தீர்கள்? உங்கள் பெற்றோர் எங்கே?' என்று அவன் குழந்தைகளைக் கேட்டான். பொலம்பாலை ஒன்றும் பேசத் தெரியாமல் அவனையே மருண்டு மருண்டு பார்த்து விழித்தாள். ஆனால் சிறுவன் கணீரென்று விடையிறுத்தான்.

'நாங்கள் சிறுபிள்ளைகள், மாமா! இதற்கெல்லாம் மறுமொழி கூற எங்களுக்குத் தெரியாது.எங்கள் அம்மா அதோ