உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மருதூர் மாணிக்கம்

111

இல்லாமலிருந்தது. ஆனால் இது அவன் அறிவாற்றலைத் தடைப்படுத்தவில்லை. ஏனென்றால் வாசிப்பில் அவனுக்கு இயற்கை ஆர்வம் இருந்தது. விரும்பிய, விரும்பிய பாடங்களை அவன் வாசித்தான். அவற்றை மற்றப் பிள்ளைகளைவிட ஊன்றிக் கருத்தாகப் பயின்றான்.பாடங்களுக்குப் புறம்பாகவும், விரும்பிய, விரும்பிய புத்தகங்களை அவன் கவனத்துடன் படித்தான்.

கண்டதுகற்கப் பண்டிதனாவான்' என்று ஒரு பழமொழி உண்டு. அவன் வகையில் அது உண்மையாயிற்று. தேர்வில் அவன் சிறப்புடன் தேறவில்லை. ஆனால் சிறப்புடன் தேறிய பிள்ளைகள் அவன் பரந்த அறிவு கண்டு வியப்படைந்தார்கள். ஆசிரியர் களுக்குக்கூட அது கண்டு மலைப்பு ஏற்பட்டது.

கதை வாசிப்பதில் மாரியப்பன் ஆர்வத்துக்கு எல்லை இல்லை. பள்ளி விட்டபின் இது அவன் நேர முழுவதையும் கொள்ளைகொண்டது. அத்துடன் அவன் வாசிப்பின் பாங்கு, ஒரு தனிப்பாங்காய் இருந்தது. புத்தகம் அவன் கையில் இருக்கும். ஆனால் அது புத்தகம் என்பதையே அவன் உள்ளம் மறந்துவிடும். அது புத்தகத்தின் கதையில் ஆழ்ந்து தவழும்.

இராமாயணம் வாசிக்கும்போது, அவன் இராமனாய் விடுவான். பாரதம் வாசித்தால், அவனே வில்விசயன். பெருங்கதையில் அவன் உதயணனாக மாறிவிடுவான். சில சமயம் அவன் விக்கிரமாதித்தன் கதை வாசிப்பான். அப்போது அவன் உட்கார்ந்திருக்கும் விசிப்பலகை, விக்கிரமாதித்தனுடைய வீர சிங்காசனம் ஆகிவிடும். தன் சங்கிலி வேதாளம் படும் பாடுபடும்.

படிப்பில் அவன் எப்போதும் தன்னை மறந்தான். தன் சூழலை மறந்தான். அந்தக் கதைகளின் உலகிலேயே அவன் நீந்தி மிதந்தான்.

தமிழிலுள்ள கதைகள் அவனுக்குப் போதவில்லை. அவன் புதுக் கதைத்தேடினான். அதற்காக அவன் மற்ற மொழிகளைப் படிக்கலானான்.கதை வளமுள்ள எந்த மொழியையும், கதைக்காக அவன் எட்டிப்பிடித்தான். அவற்றை முனைந்து படித்துத் தேர்ச்சி பெற்றான். அத்துடன் கதைப் புத்தகங்களுக்காக, அவன் பெரும் பொருள் செலவு செய்தான். கதை உலகிலுள்ள எல்லாப் புத்தகங்களையும் அவன் வாங்கினான்.