உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மருதூர் மாணிக்கம்

66

121

'அன்பரே! இளவரசே! நான் வந்த காரியம் ஆயிற்று. இனி விடைபெற்றுக் கொள்கிறேன். நண்பர் ஆய்வுக்குழுவுடன் இனி நீங்கள் கலந்தாராய்ந்து, ஆவன செய்வீர்களாக!" என்று கூறிவிட்டு, அவள் பின்னும் அன்ன நடை நடந்து சென்றாள்.

அவள் கால் சிலம்புகள், 'கலின் கலின்' என்று ஒலித்தன. அவ்வொலி தொலைவில் சென்று மெல்ல மெல்ல அடங்கிற்று. அவள் பின்னால், அவள் படைகுடிகளாக வந்த திரளும் வெளியேறிச் சென்றுவிட்டது.

‘பாரத வீரன்’ மீண்டும் தனியன் ஆனான். ஆனால் அவன் உள்ளம் இப்போது தனிமையில் இல்லை. வானளாவும் எண்ணங்கள் மீதேறி அது மிதந்து பரந்தது. அவற்றுடன் அவனும் காற்றில் மிதந்தான். அவன் உடல் இருக்கையில் இருப்புக் கால்கள் நிலத்தில் நிலைகொள்ளவில்லை. நிலம்பாவா நெடு நடைபோட்டு, அவன் முன்னும் பின்னும் நடந்து ஊசலாடினான்.

காள்ளவில்லை.

66

அவன்

‘ஆ, என் பெருமைகள் நாட்டு மக்களால் ஒப்புக் கொள்ளப் பட்டுவிட்டன. இன்னும் பெரும் புகழை நாடு என்னிடமிருந்து எதிர்பார்க்கிறது. நன்று நன்று!”

66

“தமிழகத்தின் பெண்கள் பாராட்டிவிட்டனர். ஒரு பெண்ணின் பாராட்டில், ஆயிரம் ஆண்களின் பாராட்டு அடங்கிக் கிடக்கிறது. இதை நான் அறியாதவனல்ல. அத்துடன் தமிழகப் பெண்களின் தனிநாயகம் என் இளவரசி. அவள் என் புகழில் ஈடுபட்டிருக்கிறாள். அதைப் பெருக்கி என்னுடன் ஒன்றுபடக் காத்திருக்கிறாள். என்னை இளவரசனாக்கியதுடன் அவள் அமையவில்லை. என்னை அரசனாக்கத் துடி துடித்துக் கொண்டிருக்கிறாள். 'அரசியாக என் பக்கத்தில் வீற்றிருக்க

ஆர்வம் கொண்டிருக்கிறாள்.”

"ஆகா! ஆகாகா! நான் கற்கியாய்ப் பிறந்து விட்டேன்.நாடு அதை அறிந்து, கற்கி என்று வரவேற்றுப் புகழ்பாடிவிட்டது.இனி கற்கியின் வீரப்புகழை நான் பெறவேண்டும். என் வாள் வலிமையால், வில்லாண்மையால் அதைப் பெறவேண்டும். இளவரசி இதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள். நாளையே அதற்கான வழிகோல வேண்டும்.