அப்பாத்துரையம் - 39
(244) || விட்டான். அவன் உடல் தேற இரண்டு மூன்று நாளாயிற்று. ஆயினும், பூதம் ஒழிந்தது என்று கேட்டு அவன் மகிழ்ந்தான். செய்திக் கேற்ப அரசியின் நாடாகிய நிலப்பகுதியில் எங்கும் மழை பொழிந்தது. பாரத வீரன் மகிழ்ச்சியை இது இன்னும் பெருக்கிற்று.
மழை பெய்ததும் அரசர் திட்டத்தில் ஒரு பகுதியே, கோபுரங்களிலிருந்து ஆற்றல் வாய்ந்த விசையூற்றுக்கள் திவலைகளை வானளாவ வாரி இறைத்தன. அவை திரும்பவும் விழும் சமயம் முற்றிலும் செயற்கை மழையாயிற்று. அது இயற்கை மழைபோலவே இருந்தது. அதனிடையே வீசிய ஒளி விளக்கங்கள் மின்னலைப் பறித்தன. வாணவெடிகள் இடியாக நடித்தன.
அரசனும் அரசியும் வாக்களித்தது போல, பட்டி மந்திரிக்கு ஒரு நாடு அளிக்க ஏற்பாடாயிற்று.
மணிப்புலவன்
66
இச்சமயம் பாரத வீரனுக்கு அறிமுகப்படுத்தப்பட்டான். அவன் இளவரசியிடமிருந்து செய்தி கொண்டு வந்ததாக அறிவித்தான். 'உலாவை இத்துடன் முடிக்கலாம். இளவரசி விரைவில் இங்கேயே வருவாள். இங்கேயே பட்டி மந்திரியின் சிற்றரசுப் பட்டம் நடைபெறும். இச்சமயத்திலேயே உங்களுக்கும் இளவரசிக்கும் திருமணம் நடைபெறும். பேரரசராக உங்கள் முடிசூட்டும் நடைபெறும். பட்டி மந்திரி சிற்றரசாளச் சென்ற பின், இங்கிருந்தே பேரரசாட்சியை நீங்கள் தொடங்கலாம்” என்றான் அவன்.
இரட்டை முடிசூட்டு, திருமணம் ஆகியவற்றுக்கான விழா ஏற்பாடுகள் தொடங்கின.