உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4. நன்கு முடிவுறின் நலமேயனைத்தும்

(All is well that ends well)

கதை உறுப்பினர்

ஆடவர்:

1. கொரார்டு: அரிய மருத்துவன்-ஹெலெனா தந்தை.

2. பெர்ட்டிரம்: காலஞ் சென்ற ரூஸிலான் பெருமகன் புதல்வன்-ஹெலெனாவின் காதலுக் களாய் அவளை வெறுத்தும் இறுதியில் மணந்து ஏற்றுக்கொண்டான்.

3. பிரான்சு அரசன்: காலஞ் சென்ற ரூஸிலான் பெருமகனிடம் பற்று கொண்டவன் -ஹெலெனாவையும் பெர்ட்டிரமையும் மணவினையால் இணைத்தவன்.

பெண்டிர்:

1. ரூஸிலான் பெருமாட்டி: ரூஸிலான் பெருமகன் மனைவி- பெர்ட்டிராம் தாய்-ஹெலெனாவின் காதலுக்குத் துணை தந்தவள்.

2. ஹெலெனா: மருத்துவன் கொரார்டு மகள்-தந்தை இறந்தபின், ரூஸிலான் பெருங்குடியில் பணியாளாய் பெர்ட்டிராமைக் காதலித்து அரசனுதவியால் மணந்தாள்.

3. தயானா: பிளாரென்சு நகரிலுள்ள நங்கை - ஹெலெனாவின் ஆரூயிர்த் தோழியானவள்-பெர்ட்டிரம் தகாக் காதலுக்காளாய் அதனை மறுத்தவள்.

4. மூதாட்டி: தயானாவின் தாய்.