உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேக்சுபியர் கதைகள் - 3

-}

105

விழித்தான். சற்று முன்னதாகப் பணியாள் கூறிய மொழிகளைக் கூட அவன், 'வேண்டுமென்றே ஏளனமாகக் கூறிய புனைசுருட்டு' என்று கருதினான். இப்போது அவன் கதைக்கு ஏற்றபடி தாளமிட, இப்பெண் எங்கிருந்து வந்தாள் என்று அவன் நினைத்து வியப்படைந்தான்.

ஆனால், அவன் எவ்வளவுக்கெவ்வளவு அதிரியானாவி னிடம் ஏதிலனாக ஒதுங்கி நடந்து கொண்டானோ, அவ்வளவுக் கவ்வளவு அவள் அவனிடம் கணவன் என்று உரிமை கொண்டாடிக் கெஞ்சி வற்புறுத்தி அழைக்கலானாள். அம் மொழிகளை மறுக்க முடியாமையினாலும், பசி வேளையா யிருந்ததனாலும், இப்பித்தலாட்டங்களின் முடிவுதான் என்ன என்று தெரிந்துகொள்ளும் விருப்பத்தினாலும் அவன் அவளைப் பின்பற்றி அவள் இல்லத்தை அடைந்தான்.

அதிரியானாவுக்குத் தங்கை ஒருத்தி இருந்தாள். அவளும் அதிரியானாப்ை போலவே அழகுமிக்கவள். ஆனால் அவளிடம் அதிரியானாவின் படபடப்போ ஐயமனப்பான்மையோ சிறிதும் இல்லை. அதிரியானா அந்திபோலஸை வற்புறுத்தி உணவளிக்கும் போதெல்லாம், அவள் சற்றே அகல நின்றிருந்தாள். அதிரியானாவின் கடுமொழிகளைவிட, அவளுடைய கலங்கிய ரு விழிகளும், அவ்வப்போது கூறும் அன்பு நிறைந்த அருமொழிகளும் அந்திபோலஸின் மனத்தை மிகுதியாக யக்கின. அவன் தன்வயமற்றவனாய் அவர்களுடன் ன்னுரையாடி அன்போடு உண்ணலானான்.

4. கணவன் ஏமாற்றம்

இதனிடையில் அதிரியானாவின் கணவனான மற்றைய அந்திபோலஸ், மற்ற நாளினும் மிகுதியாக நேரஞ்சென்று வீட்டிற்குத் திரும்பினான். வரும்வழியில் தன்னைத் தேடிவரும் பணியாள் துரோமியோவைக் கண்டு அவனையும் அழைத்துக் கொண்டு வந்தான். ஆனால் இருவரும் வீடுவந்து சேர்ந்தபொழுது வீட்டின் வாயில் அடைத்திருந்தது. வீட்டினுள்ளிருந்து, அதிரியானாவும் அவள் தங்கையும் யாருடனோ அளவளாவிப் பேசுங்குரல் கேட்டது. வெளியில் கதவைத் தட்டியது அவர்களுக்குக்கேட்கவில்லை.