உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




108

அப்பாத்துரையம்

சற்றுமுன் ஒரு பொற்கொல்லன் ஒரு சங்கிலியைக் காடுத்துச் சென்றதும், தன் பணியாளே முன்பின் முரணாக நடப்பதும் காண, இளைய அந்திபோலஸின் முகத்தில் ‘அந்நகர் ஏதோ சூனியக்காரியின் மந்திர வலையிற்பட்ட மாயநகர் போலும்' என்ற ஐயம் வலுத்தது.

இந்நிலையில் மூத்த அந்திபோலஸுடன் நட்புப் பூண்ட நடிகை அங்கு வந்து, தனக்குச் செய்த உறுதிப்படி சங்கிலி வராததனால் தன்கணையாழியைத் திருப்பிக் கொடுத்துவிடும் படி அவனை வேண்டினாள்.

ளைய அந்திபோலஸ், "நீ யார் என்பதையே நான் அறியேன், ஆயினும், ஏதோ சங்கிலி என்று நீ கூறுவதற்கேற்ப ஒருவன் இச்சங்கிலியை என்னிடம் எறிந்து போனான்” என்று சொல்லி அதனை அவளிடம் கொடுத்தான்.

அவள் சங்கிலியை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் போகும்வழியில் அதிரியானாவைக் கண்டு, தான் அறிந்த வரலாறுகளெல்லாம் சொல்லி, அந்திபோலஸுக்குக் கட்டாயம் பித்துத்தான் பிடித்திருக்க வேண்டும்' என்று தன் கருத்தை வெளியிட்டாள்.

5. ஆடவர் நலிவு

அதிரியானாவும் தன்னிடம் அவன் நொடிக்கு ஒருவகையாக நடப்பதை ஓர்ந்து அவள் கூறுவது உண்மையாக இருக்கக்கூடும் என்று நம்பினாள். அப்போது இளைய அந்திபோலஸும் அவனுடன் பூசலிட்ட வண்ணமாக இளைய துரோமியோவும் வந்தனர். தம் கணவர் பித்துக் கொண்டனர் என்றெண்ணிய அதிரியானாவும் அவள் பணிப்பெண்ணும் அவர்களிடம் நடிகையின் செய்தியைக் கூறி, அவர்களை உண்மையிலேயே வெளிகொள்ளச் செய்தனர். எப்படியாவது தப்பினால் போதும் என்று அவர்கள் திமிறிக் கொண்டோடப் பார்க்கவே, பெண்டிர் அவர்கள் பித்தராதலால் அடைத்து வைப்பது நன்று என்று கூறிக்கொண்டு அவர்களைப் பிடிக்கச் சென்றனர். ஆடவர் இருவரும் சினந்து எழுந்தனராயினும் அத்தகைய நெருக்கடியில் வேறு வகையறியாமல் ஓடிச்சென்று பக்கத்திலிருந்த ஒரு பெரிய