உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டு இலக்கியக் கதைகள்

79

ஆர்தர் மனம், அச்சமயம் தம் இளமைக்கனவுகள், தம் அரசாட்சி, தம் வீரர் பெரும்புகழ் ஆகிய யாவற்றையும் எண்ணிப் பெருமூச்சுவிட்டது. தம் வலக்கையாயிருந்த லான்ஸிலட்டையும் தம் உயிருக்கு உறையுளாயிருந்த கினிவீயரையும் எண்ணிற்று; இறுதியில் தெய்வீகக் குருதியேந்தி ஒளிவீசித் தம் கண்முன் வந்த கடவுளருளொளி விளக்கமாகிய தெய்வீகக் கலத்தை எண்ணி அதனை நாடிச் சென்று பெற்ற கலஹாட் பெருந்தகையின்எ பெரும்புகழில் திளைத்தது; பின் அதனைப் பெறுமாற்றலில்லாது மாண்ட, தம் உயிரினும் அரிய வீரரை எண்ணி மாழ்கிற்று; இறுதியில் தமக்குக் கண்கண்ட தெய்வமாயிருந்த மெர்லினை யெண்ணிக் கலங்கிற்று.

மெர்லினை எண்ணியதுமே, தம் பிறப்புப் பற்றி மெர்லின் கூறிய அருஞ்செய்திகளும் தாம் நேரிற்கண்ட அரும்பெருங் காட்சிகளும் தெய்வீகமான திருக்கை ஏரியின் தடத்தில் ஏந்திய எக்ஸ்காலிபரும் அவர் நினைவுக்கு வந்தன. அவர் கண்கள் அவர் முன் கிடந்த எக்ஸ்காலிபரைப் பெருமையுடனும் துயருடனும் நோக்கின. அதன் ஒரு புறம், “என்னை எடுக்க” என்றும், மறுபுறம் “என்னை எறிக" என்றும் பொறித்த எழுத்துகளைக் கண்டதே அதனை எறியும் நாள் வந்ததெனக் கண்டு பெடிவீயரிடம், ‘பன்மணிகள் பொறித்த என் கண்மணி போன்ற இப்பொன்வாள் மனிதர் கையில் படத்தக்கதன்று. இதனை தனை உன் வலிமை கொண்டமட்டும் கடலில் வீசி எறிந்துவிட்டு நீ காணும் காட்சியை வந்து கூறுக” என்று ஏவினார்.

66

தலைவன் பணி மாறாது பெடிவீயர் வாளுடன் சென்றான். ஆனால், ஆர்தர் பெருமையனைத்துக்கும் பிற்காலத்தில் ஒரே அறிகுறியா யிருக்கக்கூடும் அவ்வாளை, பல நாட்டரசாட்சி களையும் கொடுத்துக்கூடப் பெறமுடியாத பன்மணிகள் பதித்த அப்பொன்னிழைத்த வாளை எறிய அவனுக்கு மனம் வரவில்லை. "ஆர்தர் மனச்சோர்வுற்றிருக்கிறார். வாளை எறியவில்லை என்று சொன்னால் வருந்துவார். ஆகவே, இவ்வொரு வகையில் ஒரு சிறு பொய் சொன்னால் என்ன? நாளை அவர் நலமடைந்த பின் இத் தவறுதலை அவர் மன்னிப்பதுடனல்லாமல் போற்றவும் கூடும் என்றெண்ணி அதனைப் புதரில் மறைத்து வைத்துவிட்டு ஆர்தரிடம் வந்து அதனை எறிந்துவிட்டதாகக் கூறினான்.