உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டு இலக்கியக் கதைகள்

,

81

துயரமும் கலந்த உணர்ச்சிகளுடன் அதையே பார்த்து நின்றான். ஆனால், அது நீர்ப்பரப்பில் வந்து விழுமுன் வியக்கத்தக்க வகையில் வெண்பட்டாடை யணிந்த ஓர் ஒள்ளிய மென் கை அதனை ஏற்று மும்முறை சுழற்றி வீசி அதனுடன் உட் சென்றது. க் கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு வியப்பும் அச்சமும் இறும்பூதும் கலந்த தோற்றத்துடன் அவன் ஆர்தரிடம் வந்து மூச்சுவிடாமல் அனைத்தும் கூறினான்.

ஆர்தர் அதுகேட்டு மனநிறைவு

காண்டார்.

பெடிவீயரிடம், "நண்பரே! என் நாள் இப்போது அணுகிவிட்டது. மெர்லின் கூறியபடி என் யாக்கை இறவா யாக்கையானாலும் புறப்பண்புகளும் அகப்பண்புகளும் சேர்ந்து என் உரத்தைக் குலைத்தன. பிரிட்டன் இன்றிருக்கும் நிலையில் நான் நலமடைய முடியாது.ஆயின், நான் இனிச் செல்லுமிடத்தில் நன்மையன்றித் தீமையோ, ஒளியின்றி இருளோ, அன்பன்றி வன்போ இல்லை. அவ்விடத்தில் சென்று நான் குணமடைந்து வருவேன்.தீமைமிக்க இவ்விருட்காலத்தில் உன்னால் உலகைத் திருத்த முடியா தாயினும் கூட உன்னளவில் முக்கரணங்களும் தூய்மையாக நட இறைவன் முன்னிலையில் ஆவிலானில் (துறக்கத்தில்) ஒன்று கூடுவோம்" என்று ஆர்தர் கூறிப்பின் தமக்குச் செய்யும் இறுதி உதவியாகக் கடற்கரைக்குத் தம்மைத் தாங்கிச் செல்லும்படி கூறினார். பெடிவீயருக்கு அவர் சொற்கள் விளங்கவில்லையாயினும் அவர் கேட்டுக்கொண்டபடி அவரைத் தூக்கிச் சென்றார். போகும் போது ஆர்தர், காலங்கடந்து விடப்படாதென்று விரைபவர் போலப் படபடத்து “விரைந்து செல்க நேரமாய்விடும்" என்று முடுக்கினார்.

கடலலைகளின் மீது பெடிவீயர், பேரொளி ஒன்று கண்டான்.அதில் சில கரும்புள்ளிகள் தென்பட்டன. சற்றுநேரத்தில் அவ் ஒளி அழகுமிக்க பெரியதொரு படகாகவும், புள்ளிகள் அதில் தங்கியிருந்த அரமைந்தரும் அரமங்கையருமாக மாறின. மங்கையருள் மூவர் அர இளவரசிகள் போலவும், அவர்களில் நடுவில் இருந்தவள் பட்டத்தரசிபோலவும் காணப்பட்டாள். ஆர்தர், தம்மைப் படகில் சேர்க்கும்படி கூறினார். மூன்று பெண்டிரும் அவரை ஏற்றினர். அரசிபோன்றிருருந்தவள் அவர் தலையை ஆதரவுடன் மடிமீது கொண்டு கண்ணீர் வடித்தாள்.பின் படகு சிறிது சிறிதாக அகன்று மறையலாயிற்று.