உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டுக் கதைக் கொத்து

89

மாறு பணித்தான். அப்பைம்பொழில் கியூப்பிட் வாழும் பொன் மாளிகையில் தான் இருந்தது.

மறுநாள்,

காலைக் கதிரவன்

உலகமக்களைத் துயிலுணர்த்திக் கண்விழிக்கச் செய்தபோது, சைக்கீயும் தூக்கம் நீங்கி எழுந்தாள்; தன்னைச் சுற்றிலும் பார்த்தாள். தான் முன்பு ஒருபோதும் கண்டிராத ஓர் அழகிய சோலையில் நறுமண மலர்களின் நடுவே படுத்திருப்பதை அவள் உணர்ந்தாள். தன்னைப் பிடிக்கவரும் என்று தான் அஞ்சியிருந்த அக்கடற்பூதம் எங்கே என்று அவள் சுற்றுமுற்றும் பார்த்தாள். உவகைப் பெருக்கில் பாடிப் பறந்து திரிந்த பறவைகளையும், ரீங்காரம் புரிந்த வண்டுகளையும் தவிர வேறு எந்த உயிரினத்தையும் அவள் காணவில்லை. வியப்புற்ற நிலையில் அவள் நடந்தவைளை நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்கையில், இதுவரை தான் அறியாத ஓர் இன்ப உணர்ச்சி தன் உள்ளத்தில் ஊறி உடல் எங்கும் பரவிநிற்பதை அவள் உணர்ந்தாள்.

காதல் தெய்வமாக வணங்கும் கியூப்பிட் அவள் முன் தோன்றாவிடினும் அப்போது அவன் அவளையே நினைத்துக் கொண்டிருந்தபடியால், அவள் மனத்தில் அந்த இன்ப உணர்ச்சி ஏற்பட்டிருந்தது. உள்ளத்தில் ஊக்கம்தான் பெருகிநின்றதே தவிர, அச்சம் சிறிதுமில்லாமல் அகன்று விட்டது. சைக்கீ பூப்படுக்கை யிலிருந்து எழுந்து சோலைவழியே நடக்கத் தொடங்கினாள். சற்று நேரத்தில் அவள் கியூப்பிட்டின் பொன்மாளிகைக்கு வந்து சேர்ந்தாள். கதிரவன் ஒளியில் அது பளபள என மின்னியது. அம்மாளிகையின் கதவுகள் திறந்திருந்தன. முன்வாசல் வழியே சைக்கீ அப்பொன் மாளிகைக்குள் புகுந்தாள். வீட்டினுள் யாரையுமே காணவில்லை. அவள் ஒவ்வோர் அறையாகச் சென்றாள். அம்மாளிகை யாருடையதாக இருக்கக்கூடும் என்று அவள் நினைத்துப் பார்த்துக்கொண்டே அதன் அழகை வியந்து பெருமிதத்துடன் சென்றுகொண்டிருந்தாள். தன் தந்தையின் அரண்மனையைப் போல் பலமடங்கு அழகும் செல்வமும் பெருகி இருந்தது அது. அவ்வாறிருந்தும் அதில் யாரும் இல்லாதிருந்தது அவளுக்கு விந்தையாகவே இருந்தது.

உச்சிப் பொழுதில் அவள் விசாலமான ஓர் அறைக்குள் சென்றாள். அகன்று பரந்திருந்த அந்த அறையில் அறுசுவை மிக்க