உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டுக் கதைக் கொத்து

107

எதற்கு?” என்று அப்பாலோ, கியூப்பிட்டிடம் இகழ்ச்சியாகக்

கேட்டான்.

கியூப்பிட் அதைக்கேட்டு வெகுண்டு, "மலைப்பாம்பைக் கொன்ற மாவீரனே! உன் நெஞ்சையும் என் அம்புகள் துளைக்கும், பார்" கூறிவிட்டு, பார்னாசஸ் என்னும் உச்சிமலை முகட்டுக்குப் பறந்து சென்றான். தன் அம்புக்கூட்டிலிருந்து இரண்டு அம்புகளை எடுத்தான். ஒன்று பொன் முனை அம்பு. அது தைத்தவர்கள் நெஞ்சில் காதல் பிறக்கும். மற்றொன்று ஈயமுனை அம்பு. அது துளைத்தவர்கள் நெஞ்சில் பகைமை பிறக்கும்.

ஈயமுனை அம்பை அவன் டாப்னே என்னும் வன மகள் மார்பில் பாயும்படி எய்தான்; பொன்முனை அம்பால் அப்பாலோ மார்பைத் துளைத்தான். அம்புபட்ட அப்பாலோ டாப்னே செல்வதைக் கண்டு அவள்மீது காதல்கொண்டு அவளைப் பிடிக்கச் சென்றான். ஆனால், பகைமை உணர்ச்சி மிக்கிருந்த அவள் அவனை வெறுத்து அவன் பிடிக்குச் சிக்காமல் ஓடினாள். காற்றிலும் கடுகி விரைந்த அவளை அப்பாலோ அதைவிட விரைந்து தாவிப் பிடிக்க நெருங்கினான். அவன் ஓடும்போதே பல இன்மொழிக ன்மொழிகளால் அவளை அழைத்துக்

கொண்டே ஓடினான்.

டாப்னே அவன் நெருங்குவதைக் கண்டு நெஞ்சு திடுக்கிட்டு, அச்சம் மேலிட்டு, "ஐயோ! அப்பா! பீனியஸ்! என்னைக் காப்பாற்று" என்று தன் தந்தையான ஆற்றுக்கிறைவனை அழைத்தாள். அவள் அவ்வாறு அலறி வாய்மூடுமுன் அவள் தரையில் வேரூன்றி நின்று, ஒரு மரமாகிவிட்டாள். தன் மகளைக் காப்பாற்றுவதற்காகப் பீனியஸ் செய்த வேலைதான் அது. அப்பாலோ அதைக் கண்டு மிகவும் வருந்தினான். தன் அன்புக்குரிய பெண் மரமாகிவிட்டாலும் அவள்மீது தான் கொண்ட அன்பின் அறிகுறியாக அம்மரத்தின் மலர்களைக் கண்ணியாக முடித்து, அதை அவன் தன் தலையில் சூடிக்கொண்டான். அதுதான் வெற்றிவாகை மரம். அம்மரத்தின் இலைகள் எக்காலத்தும் என் அன்புபோல் பசுமையாக இருக்கட்டும் என்று அவன் வாழ்த்தினான். அதுமுதல் வாகைமரம் அப்பாலோவுக்கு உகந்த மரமாகி விட்டது.